'ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது' உதயகுமார் உருக்கம்
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜைக்கு வரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்கும் விதமாக 'ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது' என ரத்தத்தில் கையெழுத்திட்டார் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார்.
பழனிசாமி வருகை குறித்து மதுரையில் நேற்று ஜெ., பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், மாணிக்கம், ஜெ., பேரவை நிர்வாகி வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதயகுமார் பேசிய தாவது:
பசும்பொன் முத்து ராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம் தேவர் புகழுக்கு புகழ் சேர்த்து உள்ளார் பழனிசாமி. அவருக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் வகையில் 'ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது' என்ற தலைப்பில் ரத்த கையெழுத்திட்டு வரவேற்கிறோம்.
அக்.,30 காலை சென்னை யில் இருந்து விமானம் மூலம் பழனிசாமி மதுரை வருகிறார். அவரை பூரண கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சியுடனும், பத்தாயிரம் இளைஞர்கள் சீருடை அணிந்தும் வரவேற்கிறார்கள். அடுத்த தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வராக பழனிசாமி பங்கேற்பார் என்றார்.
இதைதொடர்ந்து உதய குமார் தலைமையில் நுாற்றுக்கணக்கான பேர் ரத்த கையெழுத்திட்டனர்.
மேலும்
-
ஓடும் ரயிலில் மொபைல் போனை தவறவிட்டு அபாய சங்கிலியை இழுத்தால் அபராதம்; ஆர்.பி.எப்., எச்சரிக்கை
-
'கள்ள ஓட்டை தடுக்க கைரேகை பதிவு அவசியம்'
-
இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸ்
-
நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்
-
பா.ஜ., நிர்வாகி செந்தில்குமரனை கொன்றது குறித்து கைதான நபர்; என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம்
-
வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை அவசியம்: முதல்வர் ஸ்டாலின்