ஓடும் ரயிலில் மொபைல் போனை தவறவிட்டு அபாய சங்கிலியை இழுத்தால் அபராதம்; ஆர்.பி.எப்., எச்சரிக்கை
சென்னை : 'ஓடும் ரயிலில் மொபைல் போனை தவற விட்டால், அபாய சங்கிலியை இழுக்கக்கூடாது. மீறி இழுத்தால் அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படையான, ஆர்.பி.எப்., எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஆர்.பி. எப்., உயர் அதிகாரிகள் கூறியதாவது
:
ரயில்கள், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியர், மொபைல் போனை அதிகம் பயன் படுத்துகின்றனர். இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு, ரயில்களில் சிக்குவது, தண்டவாளத்தில் தவறி விழுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
பதற்றம் இதேபோல, ஓடும் ரயிலில் சிலர் மொபைல் போனை தவற விடுகின்றனர். பர்ஸ், மொபைல் போன் அல்லது வேறு ஏதேனும் பொருள் கீழே விழும் போது, பயணியர் முதலில் பதற்றப்படக் கூடாது.
பொருள் விழும் இடத்தை குறித்துக் கொண்டு, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படைபோன்றோரிடம் தெரிவிக்க வேண்டும். ரயிலில் அபாய சங்கிலியை இழுக்கக்கூடாது.
ரயில்வே உதவி எண், 139 அல்லது 182ல் தெரிவிக்கலாம். புகாரை பதிவு செய்யும் போது, ரயில் எண், இருக்கை எண், உங்கள் அடையாள சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
பதிவு செய்யப்பட்ட பு காரின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுவர். மொபைல் போன் அல்லது பொருட்கள் மீட்கப்பட்டதும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் .
தண்டனை அதேநேரம், மொபைல் போன், நகைகள் போன்றவற்றை யாரேனும் திருடிச் சென்றால், அபாயச் சங்கிலியை இழுக்கலாம்.
மொபைல் போன் விழுந்ததற்காக, அவசரகால சங்கிலியை இழுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம் அல் லது மேற்கண்ட இரண்டும் விதிக்கப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Phone ஐ பத்திரமாக வைத்துக் கொள்ள தெரியாதவர்களுக்கு இந்த தண்டனை mandatory தான்.
கருத்து தெரிவிப்பது: புத்திசாலிகள் உங்கள் பொது அறிவைப் பயன்படுத்துகிறார்கள். ரயிலில் பயணம் செய்யும் போது மொபைலைப் பார்க்கச் சொன்னது யார்? பல பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுக்கு கதலி போடுவதை நான் பார்த்திருக்கிறேன். சிலர் இன்னும் மோசம்
எந்த ரயிலில் rpf தனது பணியை செய்துள்ளது என்று கணக்கு காட்டுங்க முதலில்
மெட்ரோ ரயிலில் மற்றும் ac வகுப்புக்களில் இருப்பதுபோன்று தானாக மூடிக்கொள்ளும் கதவுகள், முழுவதும் அடைக்கப்பட்ட ஜன்னல்கள் எல்லா ரயில்களிலும் பொறுத்தப்படவேண்டும்.
₹50,000 ஃபோன் விழுந்து விட்டால் செயினை இரண்டு முறை கூட இழுக்கலாம். சட்டங்களை இயற்றுபவர்களால் தான் நமது சட்டங்கள் கேலிக்குரியதாக மாறுகிறது. பொதுவாக இது போன்ற குறைந்த தண்டனை மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்ய தூண்டுகிறது.
நிஜம் பொருள் இழப்பவரின் வலியை இன்னமும் உணராத காவலர்கள்
இன்றைய கால கட்டத்தில் செல் போன்கள் குறைந்தது 5000 ரூபாயில் உள்ளன. கவனக்குறைவாக தவற விட்டு அபாய சங்கிலியை இழுத்தால் விதிக்கப்படும் அபராதமும் அந்த மதிப்பிலான தண்டனையாக இருக்க வேண்டும்.மேலும்
-
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
-
திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி: விஜய்
-
'தினமலர்' சாதனைகள் அளப்பரியவை
-
இன்று எங்கள் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' நாளிதழ் மிக முக்கிய காரணம்
-
2026ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
இந்தியா விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி காட்டம்