இந்தியா விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி காட்டம்

8


வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்க முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ கடுமையாக விமர்சித்தார்.


ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ததற்காக டிரம்ப் இந்தியா மீது 50% வரிகளை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு ஜினா ரைமண்டோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் டிரம்ப் நட்பு நாடுகளை எரிச்சலூட்டி வருகிறார். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், டிரம்ப் நிர்வாகம் மிக பெரிய தவறு செய்தது.



அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு நல்ல கூட்டாளியாகவோ அல்லது நண்பராகவோ இல்லாவிட்டால் அது பலவீனமாகிவிடும். அமெரிக்கா தனியாக இருப்பது ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.


ஐரோப்பா அல்லது தென்கிழக்கு ஆசியாவுடன் வலுவான உறவுகள் இல்லாமல் அமெரிக்க நிர்வாகம் திறம்பட செயல்பட முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement