அமேசானில் 30,000 பேர் ஆட்குறைப்பு
வாஷிங்டன்:தொழில்நுட்பத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது.
அமேசான் நிறுவனத்தின் கார்ப்பரேட் பிரிவில் 30,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்கான தகவல் மின்னஞ்சல் வாயிலாக ஊழியர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து அமேசான் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிறுவனம், கடந்த 2022ல் 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
உலகம் முழுவதும் 15.40 லட்சம் ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இதில், கிட்டதட்ட 3.50 லட்சம் பேர் கார்ப்பரேட் பிரிவில் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலில் விழுந்து விஜய் மன்னிப்பா?
-
தேசிய பொறியாளர் தின விழா
-
37 மாவட்ட செயற்குழு; அன்புமணிக்கு எதிராக அதிரடி காட்டும் ராமதாஸ்
-
சுகாதார உதவியாளர்களை இடமாற்றம் செய்ய கோரி மனு
-
கொச்சி - தனுஷ்கோடி சாலையில் தொடரும் மண்சரிவால் அபாயம்
-
குமரியை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்டவர் டி.வி.ஆர்.,: தமிழ் முழக்க பேரவையில் பாராட்டு
Advertisement
Advertisement