எண்கள்

6,398



இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீடுகள் குறைந்து வந்தாலும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து அன்னிய முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மதிப்பு ஆறு மடங்குக்கும் கூடுதலாக உயர்ந்து, 6,398 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 966 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.

32,000



ரி சர்வ் வங்கி, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை வரும் 31ம் தேதி ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளது. வெவ்வேறு முதிர்வு காலம் மற்றும் வட்டி விகிதங்களைக் கொண்ட நான்கு அரசு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்ட உள்ளது. இதற்கான செட்டில்மென்ட் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறும் என ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இ - குபேர் தளத்தில் மின்னணு முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13,200



சி ங்கப்பூரைச் சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான லைதவுஸ் கேன்டன், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 13,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், தனியார் கடன் பிரிவில் 8,800 கோடி ரூபாயும், ரியல் எஸ்டேட் துறையில் 4,400 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஹைதராபாதில் 12 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அறிவியல் துறை சம்பந்தமான இடத்தை நிர்வகித்து வருகிறது.

42,500



ம காராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் அமைந்துள்ள திகி துறைமுக விரிவாக்க திட்டத்தில் 42,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. திவால் நிலையை எட்டிய இத்துறைமுகத்தை அதானி குழுமம் கடந்த 2021ல் 705 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அப்போது 10,000 கோடி ரூ பாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் இந்திய கடல்சார் வார விழாவில், கூடுதலாக 42,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக, திகி துறைமுகத்தின் சார்பில் மகாராஷ்டிரா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement