நாய் மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே நாய் மீது பைக் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன், 30; கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 20ஆம் தேதி இறைச்சி வாங்குவதிற்காக பைக்கில் சென்றார். புதுப்பேட்டை மெயின்ரோடு அருகே சென்றபோது, நாய் மீது மோதி கிழே விழுந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டனை கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இறந்தார். இதுகுறித்து வட பொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement