ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மீது 14ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்

ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., கவுன்சிலர்கள் லட்சுமி தலைவராகவும், ராஜா துணைத்தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், தலைவருக்கு எதிராக, கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ப.வேலுார் டவுன் பஞ்., சேர்ந்த, 16 கவுன்சிலர்கள், தலைவர் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரிக்கை மனு அளித்தனர். கடந்த ஜூலை, 25ல் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குகள் நிலுவையில் இருந்ததால் மன்ற கூட்டம் நடத்தவில்லை.


தற்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நம்பிக்கை இல்லா தீர்மானம் நடத்தி, அதன் அறிக்கையை, வரும், 17க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். அதனால், வரும், 14 காலை, 11:00 மணிக்கு, ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் தலைவர் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த, தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் ராஜா மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement