நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், 'வரும், 31ல், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நாளை காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார்.


அதில், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விபரம், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement