உள்ளாட்சித்துறையில் ரூ.800 கோடி முறைகேடு… ஊரை அடித்து உலையில் போடும் திமுக; இபிஎஸ் விமர்சனம்
சென்னை:உள்ளாட்சித்துறை பதவிகளுக்கு ஊழியர்களுக்கு நியமிப்பதற்கான தேர்வில் ரூ.800 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபிக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; “எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய சோதனைகளின் விளைவாக இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
'JOB RACKET' முறையில் நடைபெற்ற இந்த ஊழலில் திமுக அரசின் இந்த துறை அமைச்சர் கேஎன் நேரு மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்ததாகவும், அந்த பணத்தை ஒருசில நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இமாலய ஊழல் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்றதையும், இது தொடர்பாக கிடைத்த பல ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறை டிஜிபிக்கு அறிக்கையுடன் சமர்ப்பித்து, ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டு, இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தமிழக காவல்துறை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான் தங்களால் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன்.
பொம்மை முதல்வர் ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி. அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவங்க தெரியாம அடிச்சாங்க! நீங்க இப்படியா?
வேலுமனி மாதிரியா்?
இவர் என்ன புதுசா மூட்டை அவுக்கிறார்?மேலும்
-
வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நீண்ட நாட்களாக... எதிர்பார்ப்பு; கிளியனுார் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
-
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம ஆசனங்கள் (மூன்றாம் பாகம்)
-
புதுச்சேரியில் இரு இடங்களில் மாதிரி மக்கள் தொகை... கணக்கெடுப்பு; முன்னேற்பாடுகளில் மத்திய- மாநில அதிகாரிகள் தீவிரம்
-
சென்னை மக்களே... படகு வாங்கி விடுங்கள்...!
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு; அ.தி.மு.க., ஆதரவு
-
கெட்டுப்போயிருக்கும் தமிழர்கள் மனநிலை