கெட்டுப்போயிருக்கும் தமிழர்கள் மனநிலை
தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி வந்திருக்கும் தலைவருக்கு, தமிழகத்தில் நடக்கும் ஜாதிய கொடுமைகள், நில உரிமை மீட்பு பிரச்னைகள் குறித்து எதுவும் தெரியாது. ஆனால், அவர் முதல்வர் ஆக ஆசைப்படுகிறார். அவர் போகும் இடமெல்லாம், எதற்காக கூடுகிறோம் என்றே தெரியாமல் ஒரு பெரிய கூட்டம், அவரது கூட்டங்களுக்கு வருகிறது.
வட மாநிலங்களில் தான், ஆன்மிக நிகழ்வுகளின் போது, மிதிபட்டு மனிதர்கள் இறப்பர். ஆனால், கரூரில் அப்படியொரு சம்பவம் நடந்திருப்பது வேதனை. தன் கூட்டத்துக்கு வந்து பலியானோருக்கு ஆறுதல் சொல்ல கரூருக்குத்தான் விஜய் சென்றிருக்க வேண்டும்.
கூட்டத்தில் சிக்கி, என் பிள்ளை இறந்தது குறித்து எனக்குக் கவலையில்ல; ஆனால், தலைவர் அழைத்ததால், சென்னைக்குச் சென்றேன் என்று சொல்வது, தமிழர்கள் மனநிலை கெட்டுப் போயிருப்பதையே காட்டுகிறது.
- பாலகிருஷ்ணன்
முன்னாள் மாநில செயலர், மா.கம்யூ.,
இந்த மாதிரி எல்லாம் பேசாதீர்கள் சிரிப்பு சிரிப்பா வருகிறது. ஆளுங்கட்சியை எதிர்த்து சும்மா ஒப்புக்கு ஏதாவது ஒரு போராட்டம் பண்ணவேண்டியது பிறகு படுத்துக் கொள்ள வேண்டியது. பெட்டிக்கு அடிமையான காம்ரேட்கள்.
இவ்வளவு வருடமாக அரசியலில் இருக்கிறீர்கள். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள். தலைவர்களும் அப்படியே. முடியவில்லை என்றால் அரசியலுக்கு முழுக்குப் போட்டு முடிந்தால் கட்சியை கலைக்கவும். ஒரு கட்சியாவது குறையும் சாமி.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் சிலர் தங்கள் குடும்ப இறப்பை பெரிதாக கருதுவது போல் இல்லாமல் பேசுவது வேதனை அளிக்கிறது. இது போன்ற தமிழர்களின் மனது கெட்டுப் போய் விட்டது என்பது உண்மைதான். ஆனால் இதைக் கேட்கக் கூடிய தகுதி மார்க்சிஸ்ட்டுகளுக்கு இருக்கிறதா? என்றால் இல்லை. என்றைக்கு தேர்தலுக்கு , தேர்தல் பெட்டி வாங்கி கொண்டு தங்களது கட்சியை மற்றொரு கட்சிக்கு அடகு வைத்தனரோ? அன்றே இது போன்ற தவறுகளை தட்டிக் கேட்கும் தகுதியை அந்தக் கட்சி இழந்து விட்டது!
கெட்டுப்போயிருக்கும் தமிழர்கள் மனநிலை. வெறும் டாஸ்மாக்கினாட்டு அளவில் எடுத்துக்கொண்டால் "லஞ்சப்பணம், குடி" இது தான் தமிழ்நாட்டை டாஸ்மாக்கினாடு ஆக்கியது.
இவர்கள் உள்பட எல்லோருக்கும் வயிற்றில் புளி கரைக்கிறது
"கூட்டத்தில் சிக்கி என் பிள்ளை இறந்ததுப் பற்றி எனக்கு கவலையில்லை. தலைவர் அழைத்ததால் சென்னை சென்றேன்". இப்படிச் பேசியது உண்மையா? இன்னும் நம்பமுடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை - இப்படிச் சொல்வது பேசுவது நடந்து கொள்வது, கேவலம் ...இதெல்லாம் ஒருப் பிழைப்பா? கேடு கெட்ட ஜென்மங்கள்தான் இப்படி நடந்துக் கொள்வார்கள். அரசியல் இவ்வளவுக் கீழ்த்தரமாகவா போக வேண்டும். வருத்தப் படுகின்றேன்.
ஒன்று சீன மிட்சம்? மற்றொன்று கட்டபஞ்சாயத்து கூட்டம்? நீங்கெல்லாம் பேசலாமா?
தனித்து நின்று ஒரு சீட் ஜெயித்து காட்டுங்கள் அட அது கூட வேண்டாம் டெபாசிட் வாங்குங்கள் பிறகு உபதேசம் செய்யுங்கள்.
இதற்கு அதி முக்கிய காரணம் கேடு கேட்ட அரசியல் வாதிகளால். In Sanskrit it said yathaa Rajaa Tathaa Prajaa
உண்டியல் கட்சிக்கு ஏன் கோபம், பெட்டி தான் கிடைக்கிறதே. அந்த நடிகருக்கு கூட்டம் கூடுகிறது. உண்டியல் கட்சிக்கு தொண்டர்கள் இருக்கிறார்களாமேலும்
-
தீவிர வறுமையில் இருந்து மீண்டது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
-
லாலு கட்சி வென்றால் காட்டாட்சி வரும்; அமித்ஷா ஆருடம்
-
ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பீதி
-
மனவேதனை அடைந்தேன்; ஆந்திர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
-
வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை; ஜப்பான் பிரதமர்