வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு; அ.தி.மு.க., ஆதரவு
சென்னை: 'பருவமழை மற்றும் பண்டிகை காலத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்ளக்கூடாது' என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நவ.,4 முதல் டிச.,4 வரை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது.
இப்பணி குறித்து, அரசியல் கட்சிகளுக்கு விளக்குவதற்காக, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற, 12 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடனான, ஆலோசனைக் கூட்டம், தேர்தல் கமிஷன் சார்பில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு கருத்துகளை வலியுறுத்தினர்.
பின் அவர்கள் அளித்த பேட்டி:
தி.மு.க., - ஆர்.எஸ்.பாரதி: நடப்பாண்டில், தமிழகத்தில் பருவமழை கூடுதலாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது திருத்த பணி நடக்கும் என, தேர்தல் கமிஷன் கூறிஉள்ளது.
இதில், மத்திய பா.ஜ., அரசுக்கு உள்நோக்கம் உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை தள்ளி வைக்க வேண்டும். தி.மு.க., கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க, 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., - ஜெய குமார்: தமிழகத்தில் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது.
அப்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் பெயரை நீக்கவேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் , எதுவும் செய்வதில்லை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது நல்ல விஷயம்.
பா.ஜ., - கரு.நாகராஜன்: தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்றால், வாக்காளர் பட்டியலில் இருந்து, இரட்டை ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் உள்ளிட்ட போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். எனவே, 2004ம் ஆண்டுக்கு பிந்தைய வாக்காளர் பட்டியலை, முழுமையாக ஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும்.
நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணன்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில், தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில், அவசர கதியில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், லட்சக்கணக்கான வாக்காளர்களை புதிதாக சேர்ப்பதும், மக்களாட்சி முறைக்கு எதிரானதாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திறம்பட செய்தால் திருத்தும் திருப்தியாக இருக்கும் யாருக்கு யாருக்கோ ?
உங்க பேரு? சின்ன துரை! அண்ணன்? பெரிய துரை! தம்பி? தம்பி துரை? அப்பா? துரை சாமி! - சரி எல்லோரையும் கூப்பிடுங்கள்! நாந்தாங்க அது! இதோ பாருங்க வாக்காளர் அடையாள அட்டை! கட்சி ஆபீஸில் செய்து குடுத்தாங்க! பூத்துக்கு ஒரு ஓட்டு!
திருத்தம் நல்ல விஷயம். திறம்பட நடப்பது சாத்தியமில்லாத விஷயம். சிறுபான்மை மக்களும், நிரந்தர வேலையில்லாமல் வேலை, ஊர் என மாறி கொண்டே இருப்பவர்கள். மேற்கூறிய இரு வகையும் அதிகம் இரட்டை வாக்கு உரிமை வைத்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு விதிமுறை அலட்சியம். தங்கள் சொந்த ஊரில் ஒன்றும், வசிக்கும் ஊரில் ஒன்றும் இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் தான் சிறுபான்மை ஓட்டுக்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு. குழப்பங்களில் மீன் பிடிப்பவர்களுக்கு சிறிது கலக்கமாக தான் இருக்கும்.
போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்கள் இந்த விவரங்களை கண்டறிந்து நீக்குவது தவறா முதல்வர் அவர்களே
பின்ன? அந்த மாதிரி வாக்காளர்கள் இல்லேன்னா நாங்க கள்ள வோட்டு எப்படி போடுறது? எங்க அடிமடியிலேயே கைய வைக்கிறீங்களே?
ஒவ்வொரு நிறுவனமும், சரக்கு கையிருப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்ப்பது நல்லதுதானே. இவரே முன்னர் இந்த வாக்காளர் பட்டியலை, குறை கூறியும், சரிபார்க்க வேண்டும் என்று கூறியவர்தானே எந்தவொரு நிர்வாக செயல் முறைகளையும் எதிர்ப்பதை கொள்கையாகவே வைத்துள்ளார் நம் முதல்வர். மடியில் கணம் இல்லாதவருக்கு பயம் எதற்கு ?மேலும்
-
திரிசூல் பயிற்சியில் இந்திய முப்படைகள்; வெளியான 'திகில்' வீடியோ வைரல்
-
டென்னிஸ் போட்டிகளில் இருந்து போபண்ணா ஓய்வு
-
விளம்பர சர்ச்சை: அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
-
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
16 அங்குல பசு!
-
காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது