நவ.,5ல் சிறப்பு தவெக பொதுக்குழு கூட்டம்: விஜய் அறிவிப்பு
சென்னை: தவெகவின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த அமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.
சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்', அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு. நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.
தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும்
கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை. அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
கடந்த ஒரு மாத காலமாக தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.
கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான் நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.
இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி வரும் நவம்பர் 5ம் தேதி புதன்கிழமை அன்று. நம் தமிழக வேற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (17)
Arachi - Chennai,இந்தியா
29 அக்,2025 - 22:38 Report Abuse
அடிச்சி சொல்லலாம் இவர் முழுமையான அரசியலை வாதி அல்ல தலைமைப்பண்புக்கு தகுதியற்றவர் . சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு ஓடி ஒழியக்குடியவர் மொத்தத்தில் அரைவேக்காடு.அத்தனை இடத்திலும் டெபாசிட் இழப்பர் 0
0
Reply
David DS - kayathar,இந்தியா
29 அக்,2025 - 22:27 Report Abuse
விஜய் கூட்டத்துக்கு தான் இனி யாரும் வர மாட்டாங்கன்னு நினைச்சா அவரை பத்தின நியூஸ் ல கமெண்ட் போட கூட ஆளு இருக்காது போல 0
0
Reply
சந்திரன் - ,
29 அக்,2025 - 21:02 Report Abuse
எனக்கென்னவோ மறைந்த சனியன் சகடை கேரக்டரில் சிறப்பாக நடித்த மறைந்த கோட்டா சீனிவாசன் இப்போது நினைவில் வந்து, வந்து போகிறார். பாவம் அவர் திரைப்படத்தில் மட்டும்தான் சனியன் சகடை ஆனால் நிஜத்தில்? . யாரும் தவறாக எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல. 0
0
Reply
சோழநாடன் - Tiruchirappalli,இந்தியா
29 அக்,2025 - 20:55 Report Abuse
கரூர் செல்ல மண்டபம் கொடுக்காமல் திமுக சதி செய்கிறது என்று ஒப்பாரி வைத்த மகா நடிகருக்கு ஆறுதல் சொல்லவும், ஆறுதல் பெறவும் மகாபலிபுரத்தில் மட்டும் அரசு எப்படி கொடுக்கச் சொல்லியிருக்கும். இப்போது பொதுக்குழுவுக்கும் மண்டபம் கிடைத்துவிட்டது என்றால் திமுக நடிகர் விஜய்-ஐ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதைத்தான் புரிந்துகொள்ளமுடியும். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
29 அக்,2025 - 20:16 Report Abuse
சாவு விழுந்த ஒற்றை வீட்டு ஆட்களே, குறிப்பிட்ட நாட்கள் வரை எந்த நிகழ்விலும் பிற இடங்களில் அந்த கேதம் தொடர்பான நிகழ்வுகளை கூட இயன்ற வரை தவிர்ப்பது வழக்கம்...கரிக்கால், கரிக்கை அதாவது கருமம் செய்தவர்கள் என்பதால்...விபரீத பின்விளைவுகளை தவிர்க்கவும் கூட.. ஆனால் இந்த சோசப்பு 41 கருமாதி கர்மங்களை செய்தவர்களை ஒரே இடத்தில் கூட்டி கும்மியடித்து இருக்கிறது...என்ன சொல்ல? வில்லங்கம் நிகழாமல் இருக்க வேண்டும்.... 0
0
Reply
viki raman - ,
29 அக்,2025 - 19:32 Report Abuse
isi தர சான்றிதழ் பெற்ற அக்மார்க் அரசியல்வேதி வாரேனுங்கோ 0
0
Reply
நிவேதா - Dindigul,இந்தியா
29 அக்,2025 - 19:07 Report Abuse
நமது நயினாரையும் சேர்த்துக்குங்க. விஜயை விட அவர் தான் ஒரு மாதமாக கரூர் சம்பவத்துக்காக உருண்டு பிரண்டு அழுகிறார் 0
0
Nagarajan D - Coimbatore,இந்தியா
29 அக்,2025 - 20:02Report Abuse
அவரை சேர்த்து கொள்ளலாம் இதுவரை அழுத்ததற்காக... இனிமேல் அழப் போகும் ராமசாமி கூட்டத்தை என்ன செய்யலாம்... நேற்று துணை ஜனாதிபதி கான்வாய் செல்லும் சாலையிலே ஒரு புள்ளிங்கோ ஹெல்மெட் கூட இல்லாமல் அனுமதித்த போலீசுக்கும் அந்த துறைக்கும் கிடைக்க உள்ள வசவுகளுக்கும் சேர்த்து அழப்போகிறார்...... 0
0
Reply
Anand - chennai,இந்தியா
29 அக்,2025 - 19:04 Report Abuse
இவர் வேற... 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
29 அக்,2025 - 18:41 Report Abuse
அண்னே சித்தப்பா இறந்து விட்டார் அண்ணே... அப்படியா நீ சித்தி, தம்பி தங்கை எல்லோரையும் கிளம்பி நம்ம வீட்டுக்கு சென்னைக்கு வந்து ஆறுதல் வாங்கிட்டு போங்க 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
29 அக்,2025 - 18:38 Report Abuse
42 பேர் இருந்து கிடைக்க தன் உயிர் காத்து கொள்ள ஓடிய மாவீரன் இவர் , இவரை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்ட இவர் தான் என்றால் அடுத்த கட்ட தலைவர் எவரும் மருத்துவமனையில் காணோம் உதவி செய்ய 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நீண்ட நாட்களாக... எதிர்பார்ப்பு; கிளியனுார் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
-
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம ஆசனங்கள் (மூன்றாம் பாகம்)
-
புதுச்சேரியில் இரு இடங்களில் மாதிரி மக்கள் தொகை... கணக்கெடுப்பு; முன்னேற்பாடுகளில் மத்திய- மாநில அதிகாரிகள் தீவிரம்
-
சென்னை மக்களே... படகு வாங்கி விடுங்கள்...!
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு; அ.தி.மு.க., ஆதரவு
-
கெட்டுப்போயிருக்கும் தமிழர்கள் மனநிலை
Advertisement
Advertisement