நத்தம் அருகே கார் மோதி கணவன், மனைவி பலி நத்தம் அருகே கார் மோதி கணவன், மனைவி பலி

நத்தம்: நத்தம் அருகே கோசுகுறிச்சி-கும்பச்சாலையை சேர்ந்தவர் ராஜா 55. விவசாயி. இவரது மனைவி பெசலி 45,இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு நான்குவழிச்சாலையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே இருக்கும் தனது மருமகன் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு செல்ல துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.


அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னையை சேர்ந்த மாடசாமி 28, என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் அவர்கள் இருவர் மீது பயங்கரமாக மோதியது.இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.இதுகுறித்து போலீஸ்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement