கும்பக்கரையில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் 'குஷி'
பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தண்ணீர் வரத்து சீரானதால் வனத்துறை குளிக்க அனுமதித்தது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவிஉள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்காணல், பாம்பார்புரம் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. அருவிப்பகுதியில் கனமழையால் அக்.11 முதல் வெள்ளப் பெருக்கினால் குளிக்க வனத்துறை தடை விதித்தது. அடுத்தடுத்த நாட்களில் வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அக்.20ல் தீபாவளியன்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்த்தனர்.
அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. நேற்று முன்தினம் மாலையில் தண்ணீர் வரத்து சீரானது. இதனால் 18 நாட்களுக்கு பிறகு நேற்று (அக் 29) முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவி யில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் தண்ணீர் பளீச் என கொட்டியது.அருவிப்பகுதி வலது புறம் 50 மீட்டர் தூரத்திற்கு பாறைகள் தூய்மையானது. அருவியில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர் கண்காணிப்பு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்ட போதிலும், அருவிப்பகுதியில் வெயில், மேகமூட்டம் என தட்பவெப்பநிலை 'மாறி மாறி' நிலவியது. மழை பெய்கிறதா என வனத்துறையினர் கண் காணித்து வருகின்றனர்.
மேலும்
-
விளம்பர சர்ச்சை: அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
-
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
16 அங்குல பசு!
-
காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
-
திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி