இந்தியாவுக்கு மேலும் 6 மாதம் சலுகை: அமெரிக்கா முடிவில் மாற்றம்
 
 புதுடில்லி: ஈரானின் சாபஹார் துறைமுகம் மீது விதிக்கப்பட உள்ள தடையில் இருந்து இந்தியாவுக்கு, அமெரிக்கா  மேலும் 6 மாதம்  அவகாசம் அளித்து உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாபஹார் துறைமுகம், ஈரானின் சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஈரானின் துறைமுகங்களிலேயே மிகப் பெரியதும், அங்குள்ள துறைமுகங்களில் இந்திய பெருங்கடல் பகுதிக்கு நேரடி அணுகலை கொண்டதும் இந்த சாபஹார் துறைமுகம் மட்டுமே. குஜராத் மற்றும் மும்பை கடற்பகுதிகளிலிருந்து நெருக்கமானதாகவும் இத்துறைமுகம் உள்ளது. இன்னும் எளிதாக சொல்வதென்றால், குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்திற்கும் சாபஹார் துறைமுகத்திற்கும் இடையேயான துாரம், புதுடில்லி - மும்பை இடையேயான துாரத்தை விட குறைவானது.
சாபஹார் துறைமுகமானது பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான வர்த்தக வழியை வழங்குகிறது. இது இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும்.  ஆப்கானிஸ்தானுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கு இந்தியாவுக்கு மிக முக்கியமான துறைமுகமாக இது திகழ்கிறது.
கடந்த 2024 ல்  அந்நாட்டின் சாபஹார் துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியா  ஈரானுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரம்  கோடி ரூபாய்  முதலீடு செய்ததுடன், ரூ.2,000 கோடிக்கு அதிகமான செலவில் துறைமுகத்தை சுற்றிலும் கட்டமைப்புகளை இந்தியா உருவாகியுள்ளது. திட்டம் துவங்கிய காலத்தில் அமெரிக்கா - இந்தியா இடையே நல்லுறவு இருந்தது. இதனால், இத்திட்டத்துக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கவில்லை.  இந்தியாவுக்கு முழு விலக்கு அளித்து இருந்தது. 
தற்போது, அணு ஆயுத  ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பிரச்னை உள்ளது. இதனால் ஈரானுக்கு எதிராக தடைகளை அந்நாடு அறிவித்து வருகிறது. மேலும், சாபஹார் துறைமுக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு இருந்த  சலுகையை ரத்து செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது. இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்நிலையில், சாபஹார் திட்டத்துக்கு இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையை மேலும் 6 மாதத்துக்கு தொடர அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு உறுதி  பூண்டுள்ளோம். இது தொடர்பாக இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 சீனாவுடன் சேர்ந்து பிரிக்ஸ் கரென்சியை கொண்டுவந்து, அமெரிக்கா பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
  சீனாவுடன் சேர்ந்து பிரிக்ஸ் கரென்சியை கொண்டுவந்து, அமெரிக்கா பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஓன்னும் புரியல .இந்தியா ஈரானில் துறைமுகத்தை பயன்படுத்த /நிர்வகிக்க அமெரிக்கா அனுமதி ஏன் தேவை ? ஈரான் அமெரிக்காவின் ஆதிக்கத்திலும் இல்லை ,கடல் பகுதிகளெல்லாம் அமெரிக்காவிற்கு சொந்தமும் இல்லை .இது உலகத்தை மிரட்டும் தீவிரவாதம் .ஒரு தத்துவத்தை நாம் நாய்களிடமிருந்து கற்றது என்னவென்றால் .ஒரு நாய் தெருவில்ஓடும் .அதைக்கண்ட இன்னொரு நாய் அதை துரத்தும் .ஓடின நாய் நின்று திரும்பினால் துரத்திய நாய் திரும்பி ஓடி விடும்.அதைப்போல ,டே போடா என்று சொல்லவேண்டும் .டே இவன் நல்லவே அடிக்கிறாண்டா என்று கீழிறங்கி வருவான் .இந்த தத்துவத்தை தந்த புயலுக்கு நன்றி .
  ஓன்னும் புரியல .இந்தியா ஈரானில் துறைமுகத்தை பயன்படுத்த /நிர்வகிக்க அமெரிக்கா அனுமதி ஏன் தேவை ? ஈரான் அமெரிக்காவின் ஆதிக்கத்திலும் இல்லை ,கடல் பகுதிகளெல்லாம் அமெரிக்காவிற்கு சொந்தமும் இல்லை .இது உலகத்தை மிரட்டும் தீவிரவாதம் .ஒரு தத்துவத்தை நாம் நாய்களிடமிருந்து கற்றது என்னவென்றால் .ஒரு நாய் தெருவில்ஓடும் .அதைக்கண்ட இன்னொரு நாய் அதை துரத்தும் .ஓடின நாய் நின்று திரும்பினால் துரத்திய நாய் திரும்பி ஓடி விடும்.அதைப்போல ,டே போடா என்று சொல்லவேண்டும் .டே இவன் நல்லவே அடிக்கிறாண்டா என்று கீழிறங்கி வருவான் .இந்த தத்துவத்தை தந்த புயலுக்கு நன்றி . இரான் துறைமுகத்தில் இந்தியா கட்டுமான வேலைகளை செய்ய அமெரிக்கன் யார் சலுகை தருவதற்கு ? ..மண்டை கணம் அதிகம் இருக்கும் அமெரிக்கனுக்கு, குறிப்பாக டிரம்புக்கு, அனைவரும் சேர்ந்து குட்டு வைக்க வேண்டும்..
  இரான் துறைமுகத்தில் இந்தியா கட்டுமான வேலைகளை செய்ய அமெரிக்கன் யார் சலுகை தருவதற்கு ? ..மண்டை கணம் அதிகம் இருக்கும் அமெரிக்கனுக்கு, குறிப்பாக டிரம்புக்கு, அனைவரும் சேர்ந்து குட்டு வைக்க வேண்டும்.. நமக்கு, பாகிஸ்தானை விட மிகவும் ஆபத்தானது அமெரிக்கா என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.
  நமக்கு, பாகிஸ்தானை விட மிகவும் ஆபத்தானது அமெரிக்கா என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. ஆறு மாத காலத்திற்குள் மாற்று வழி காணவேண்டும். அடுத்தவனை நம்பி இது போன்ற எந்த காரியத்திலும் இறங்கும் போது யோசித்து செயல் பட்டால் நன்றாக இருக்கும்.
  ஆறு மாத காலத்திற்குள் மாற்று வழி காணவேண்டும். அடுத்தவனை நம்பி இது போன்ற எந்த காரியத்திலும் இறங்கும் போது யோசித்து செயல் பட்டால் நன்றாக இருக்கும். இந்தியா இரான் ரெண்டு நாடுகளுமே அமெரிக்கா பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குறது ...
அமெரிக்க ராஷ்டிரபதி தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள்
இந்தியா இரான் ரெண்டு நாடுகளுமே அமெரிக்கா பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குறது ...
அமெரிக்க ராஷ்டிரபதி தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள்மேலும்
-     
          பெருந்தன்மைக்கு மற்றொரு சொல் 'தினமலர்'
-     
          ஒரு கோடி பேருக்கு வேலை: பீஹாரில் தேஜ கூட்டணி வாக்குறுதி
-     
          தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது: வல்லபாய் படேல் பிறந்தநாள் விழாவில் மோடி பேச்சு
-     
          நெருப்போடு விளையாடுகிறார்கள்; பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்
-     
          இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை
-     
          ஆசை நமக்குள் எப்படி உருவாகிறது?


 
  
  
 


