வேன் மீது டூவீலர் மோதி பணியாளர் காயம்

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா குள்ளப்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேந்தன் 39. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அலுவலக பணி யாளர்.

இவர் டூவீலரில் இரவில் முதலக்கம்பட்டியிலிருந்து குள்ளப்புரம் நோக்கி சென்றார். இரவில் எவ்வித சிக்னல் இல்லாமல் இருட்டில் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த பால் ஏற்றிச்செல்லும் வேன் மீது டூவீலர் மோதியது.

இதில் வெற்றிவேந்தன் காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

ஜெயமங்கலம் போலீசார் வேனை கைப்பற்றி, டிரைவரை தேடி வருகின்றனர்.-

Advertisement