பெண்ணை தற்கொலைக்கு துாண்டியவர் மீது வழக்கு
ஈரோடு;பெருந்துறை, காஞ்சிகோவில்-நசியனுார் சாலை, முள்ளம்பட்டி அலமேடு பூபதி ராஜா மனைவி பூமணி, 27; காஞ்சிகோவில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ஊர்மக்கள் இவரிடம் பணம் வாங்குவது, கொடுப்பது வழக்கம். நானும் எனக்கு தெரிந்த பெண்கள் ஆறு பேருக்கு, ௨.௯௧ லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தேன். இரு மாதங்களுக்கு முன் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி வீட்டில் இருந்தேன். அவருக்கு பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பணம் கேட்டு தகாத வார்த்தை பேசி, ஜாதி பெயரை குறிப்பிட்டு அநாகரிகமாக, தற்கொலைக்கு துாண்டும் விதமாக பேசினார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
விசாரித்த போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மூன்று பிரிவுகளில், சுந்தரமூர்த்தி மீது வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
மேலும்
-
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை
-
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்
-
கோவை கல்லுாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்
-
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் விவகாரம்; நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்
-
கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்: பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது