கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்: பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது

11


திருவனந்தபுரம்: கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பெண் பயணி, வர்க்கலா அருகே போதை ஆசாமியால் கீழே தள்ளி விடப்பட்டார். கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்படுகிறது. போதை ஆசாமி சுரேஷ்குமார், 48, கைது செய்யப்பட்டார்.


கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த பெண் பயணியை வர்க்கலா மற்றும் கடக்கவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே போதை ஆசாமி சுரேஷ்குமார், 48, கீழே தள்ளிவிட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் போதை ஆசாமி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது திருவனந்தபுரம் போலீஸ் ஸ்டேஷனில் போதை ஆசாமி சுரேஷ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே உடனடியாக வர்க்கலா உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்து இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்படுகிறது. தலை மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரயிலை சென்ற பெண்ணை போதை ஆசாமி கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

வழக்குப்பதிவு



காயமடைந்த பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம் ரயில்வே போலீசார், போதை ஆசாமி சுரேஷ்குமார் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 109 இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement