கொடிவேரியில் பராமரிப்பு பணி தீவிரம்
கோபி:கோபி அருகே கொடிவேரி தடுப்பணை பகுதியில், கடந்த அக்., 18ல் பெய்த பலத்த மழையால், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, பரிசல் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 
இதன் பிறகும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 15வது நாளாக நேற்றும் தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று தடுப்பணை வழியாக பவானி ஆற்றில்,கன அடி நீரே சென்றது. 
இந்நிலையில் பலத்த மழையால், தடுப்பணை வளாகத்தின் சிறுவர் பூங்காவில் இருந்த ஓரிரு மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தது. 
இதனால் பூங்கா தடுப்பு கம்பி சேதமடைந்தது. அதேசமயம் வெள்ளப்பெருக்கில் பவானி ஆற்றில் அடித்து வரப்பட்ட மரங்கள், தடுப்பணையில் சிக்கி சீரான நீரோட்டத்துக்கு தடையாக இருந்தது. இதனால் பாசன உதவியாளர்கள் அடங்கிய குழுவினர், சேதமான சிறுவர் பூங்கா ஓரத்தில் பாதுகாப்பு வேலி, தடுப்பணையில் சிக்கியிருந்த மரங்களை அகற்றும் பணியில் நேற்று  ஈடுபட்டனர். 
மேலும்
-     
        
 கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்
 -     
        
 தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை
 -     
        
 கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்
 -     
        
 கோவை கல்லுாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்
 -     
        
 ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் விவகாரம்; நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்
 -     
        
 கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்: பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது