ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் ஒருவர் கைது
   தொண்டாமுத்தூர்:  தேனி, கம்பத்தை சேர்ந்தவர் விஜய், 28. இவரும், இவரது உறவினருமான பாண்டீஸ்வரனும்,33  இணைந்து, பழைய தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். 
 விஜயிடம், அவரது சிறை நண்பரான மதுரையை சேர்ந்த தர்மா, கோவையில் ஒருவரிடம், 100 பவுன் தங்க நகை உள்ளதாகவும், அதை, 50 லட்சம் ரூபாய்க்கு பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி, விஜயும், பாண்டீஸ்வரனும், அக்., 18ம் தேதி, கோவைக்கு வந்தபோது, தர்மா, விஜயை, நகை வாங்க செல்வதாகக்கூறி, மதுக்கரை நோக்கி காரில், அழைத்துச் சென்று, அங்கு, 50 லட்சம் ரூபாயை மிரட்டி கொள்ளையடித்துவிட்டு, கூட்டாளிகளுடன் தப்பி சென்றார். 
 விஜய் அளித்த புகாரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, தர்மா, வெங்கட்பிரபு உள்ளிட்ட 10 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில், இக்கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டு கொடுத்த விருதுநகரை சேர்ந்த, சட்டக்கல்லூரி மாணவன் கார்த்திக்,25 என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். 
மேலும்
-     
        
 சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்
 -     
        
 ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்; பீஹாரில் அமித்ஷா பிரசாரம்
 -     
        
 கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
 -     
        
 கிட்னி முறைகேடு; சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; இபிஎஸ்
 -     
        
 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
 -     
        
 அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்