சிக்னலில் நின்றிருந்த 3 பைக்குகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி
   பெங்களூரு:  பெங்களூரில் சிக்னலுக்காக நின்றிருந்த மூன்று பைக்குகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில், இருவர் உயிரிழந்தனர். 
 கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ரிச்மென்ட் சர்க்கிளில் இருந்து சாந்தி நகர் நோக்கி நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்றது. 
 அங்குள்ள சங்கீதா சிக்னலில் சிவப்பு சிக்னல் போடப்பட்டிருந்ததால், வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், மூன்று பைக்குகள் மீது மோதியது. அதில் ஒரு பைக்கை, 150 அடி துாரத்துக்கு இழுத்து சென்ற ஆம்புலன்ஸ், அங்கிருந்த போலீஸ் பூத் மீது மோதி நின்றது. 
 இந்த விபத்தில் பைக்கில் சென்ற இஸ்மாயில், 40, அவரது மனைவி சமீன் பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் இருவரை போலீசார் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 
 உயிர் காக்கும் வாகனமாக கருதப்படும் ஆம்புலன்ஸ் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் ஆம்புலன்சை உடைத்து தலை குப்புற கவிழ்த்தனர். மோதலுக்கு காரணமான ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் தப்பியோடினார். 
 வழக்கு  பதிவு செய்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்கை கைது செய்து விசாரிக்கின்றனர். 
  ஆம்புலன்ஸில் இருக்கிற ஒரு உயிரை காப்பாற்ற ரோட்டில் போகிற பல பேர் உயிரை எடுப்பதுதான் சரியான அணுகுமுறையா? ஆம்புலன்ஸ் என்பதும் ஒரு வாகனம்தான் , அது வாகன சட்டத்தின் கீழ் வராதா?
  பிணியாளர்கள் இல்லாவிட்டாலும் வேகத்தை கட்டு படுத்தாமல் ஓட்டுவது இவர்கள் தாங்கள் என்னவோ ஆளுநர் என்று எண்ணி கொண்டு ஊர்திகளை இயக்குகிறார். காவல் துறை இந்த மாதிரி செயலுக்கு ஆப்பு வைக்க வேண்டும்.
  வழக்கு பதிவு செய்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்கை கைது செய்து விசாரிக்கின்றனர். விசாரணை என்ன வேண்டியிருக்கு? வழக்கு எதற்கு? குடிபோதையில் வாகனத்தை ஒட்டியிருப்பான். பிடித்து நாலு சாத்து சாத்தி சிறையில் அடைக்கவும். பிணியாளர்களே இல்லாமல் இருந்தாலும், இந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளுக்கு ஒரு தெனாவட்டு. அவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று சும்மாவே சைரன் செய்துகொண்டு மிக மிக வேகமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவார்கள்.மேலும்
-     
        
 சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்
 -     
        
 ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்; பீஹாரில் அமித்ஷா பிரசாரம்
 -     
        
 கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
 -     
        
 கிட்னி முறைகேடு; சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; இபிஎஸ்
 -     
        
 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
 -     
        
 அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்