உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேடசந்துார்: வேடசந்துார் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., காந்தி ராஜன் தலைமை வகித்தார்.

தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் மேகலா முன்னிலை வகித்தனர். மகளிர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 வகையான நலத்திட்டங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டன.

தாசில்தார் மணிமொழி, பேரூராட்சி செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது, முன்னாள் வி.ஏ.ஓ., ஆண்டவர் பங்கேற்றனர்.

Advertisement