தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு
கோவை: கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், தாக்கப்பட்ட இளைஞர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவியை, மருத்துவமனைக்கு நேரில் சென்று, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தினார்.
இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அறிக்கை தயாரிக்க இருக்கிறேன். இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். அதனால், விசாரணை விரைவாக நடந்து வருகிறது. இந்த கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு, கண்டிப்பாக கடுமையான தண்டனை கிடைக்கும்.
2022ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மகளிர் ஆணையத்துக்கு வரும் புகார் மனுக்கள் அடிப்படையில் இதை சொல்கிறேன்.
பெண்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு எல்லாம் சமூகத்துக்கு பயந்து கொண்டு, வெளியில் சொல்லாமல் இருந்தனர். இன்றைக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் புகார் மனுக்கள் அதிகரித்துள்ளன.
மகளிர் ஆணையம், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மத்திய பா ஜா அரசின் சட்டம் சரியில்லை ...பா ஜா வுக்கு பெண்கள் மீது அக்கறை இல்லை ..அங்கே போய் கேளுங்க
நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் டாஸ்மாக் மற்றும் பவுடர் போதைகள். விடியல் அரசு டாஸ்மாக் மூலம் பல்லாயிரம் கோடிகளை அள்ளி சுருட்டி முழுங்கி வருகிறது. உற்பத்தி, விற்பனை செய்து திமுக தலைகள் கொழுத்து வருகிறார்கள். படிப்படியாக போதையை குறைத்தால் தான் குற்றங்கள் குறையும். நடக்குமா.
People Dont Believe Selfish Case/ News/Vote/Power Hungry Conspiring-DreadedSelfSaint Criminals As 50% FalseComplainants are NeverPunished
சே சே தமிழக பெண்கள் அதாவது சின்ன சிறு குழந்தை முதல் கிழவிகள் வரை தமிழகம் மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று பெருமையுடன் கூறி கூத்தாடுகிரார்கள் என்று ஆக இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி நடப்பது திராவிட மாடல் ஆட்சி நடத்தி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று பெருமையுடன் காரி உமிழ கூடிய வகையில் இல்லாமல் சிறப்பாக நடத்துகிறேன் என்று அவரே பெருமை பட்டு நான் தான் நம்பர் ஒன்னூ முதல்வர்.என்று தன்னை தானே சிறப்பித்து கொள்வார் தமிழா... இந்த அம்மணி பொய் சொல்கிறது.....
ஸ்டாலின் அவர்களே ! உங்களது ஆட்சியில் சட்டத்திற்கு விரோதமா எதனையும் தைரியமா செய்யலாம் என்ற மனநிலை அதிகரித்துள்ளது. உங்க வீட்டிலே பெண்களே இல்லையா ? பிரச்னையின் ஆழம் பயம் போய்விட்டது. அவிழ்த்து விட்டாச்சு. இனிமே ரோட்லே நடமாட முடியாது. பொதுவெளியில் மது குடிப்பதை சட்டம் தடை செய்வதில்லை. போலீஸ் கண்கானிப்பை உண்மையிலேயே தீவிரப்படுத்தனும்.
// உங்க வீட்டில் பெண்களே இல்லையா // வெள்ளந்தியான கேள்வி. ஈ வே ரா சித்தாந்ததை பின்பற்றினால் இந்த நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் vandhu விடும். பிறகென்ன , வாழ்க்கை ஜாலி தான்.
இந்த ஆட்சியில், பென்கள் தனக்கு நடந்த கொடுமைகளை மறைக்காமல் ,தைரியமாக புகார் குடுத்து நீதி பெறுகிறார்கள், என்று இந்தம்மா சொல்லுது,
பகலவன் புழுகுகிறான்