'போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்'

1

சென்னை: தமிழக பா.ஜ.,வின் மாநில அளவிலான 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் நேற்று நடந்தது.

இதில், தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள், 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர் .

நீக்கம் கூட்டத்தில் பைஜயந்த் பாண்டா பேசியது குறித்து, கட்சியினர் கூறியதாவது:



டில்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள முகவரியில் பலர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தனர்.
Latest Tamil News
அவர்கள், தங்கள் மாநிலத்திலும், வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்தனர். இதை பயன்படுத்தி, அங்குள்ள கட்சிகள், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தன. தேர்தல் சமயத்தில், போலி வாக்காளர்களை பயன்படுத்தி, ஓட்டுகளை பதிவு செய்து, வெற்றி பெற்று வந்தன.

தேர்தல் கமிஷன், டில்லியில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால், இரட்டை வாக்காளர்கள், உயிரிழந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் ஆகியோர் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியது.

Latest Tamil News

இதை எதிர்த்து, 'ஆம் ஆத்மி' கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எனினும், வாக்காளர் பட்டியலில், உண்மையான, தகுதியான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்து, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

டில்லி சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில், 500 - 1,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க, போலி வாக்காளர்களை நீக்கியதே முக்கிய காரணம்.

தமிழகத்திலும் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளது.

கூட்டணி ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், பா.ஜ.,வினர் முழுவீச்சில் செயல்பட்டு, இரட்டை வாக்காளர்கள், உயிரிழந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி, தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வே ண்டும்.

போலி வாக்காளர்களை நீக்கிவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசியதாக கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement