ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார்

சென்னை: நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை சுந்தர்சி இயக்க உள்ளதாக நடிகர் கமல் அறிவித்துள்ளார்.


நடிகர் ரஜினி கூலி படத்திற்கு அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.


இந்நிலையில் ரஜினியின் 173வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


சுந்தர் சி இந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும், 2027 ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாகவும் கமல் அறிவித்துள்ளார். இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்தப் படத்தில் கமல் நடிப்பாரா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.



@twitter@https://x.com/ikamalhaasan/status/1986067542881034633twitter

Advertisement