ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டிய, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம் பெற்றதாக கூறப்படும் வாக்காளர்களில் ஒருவரான பிங்கி ஜூகிந்தர், ''நான் எந்த தவறும் செய்யவில்லை. வாக்கு திருட்டு ஆதாரமற்றது'' என குற்றம் சாட்டி உள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல், ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பினார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், '' ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. அதில், 5.21 லட்சம் பேர் போலி வாக்காளர்கள், 93,174 பேர் தகுதியற்ற வாக்காளர்கள், 19.26 லட்சம் பேர் ஒரே பெயரில் பல இடங்களில் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஹரியானாவில், எட்டு வாக்காளர் களில் ஒருவர் போலியானவர்.
ஹரியானாவில் உள்ள ராய் ஓட்டுச்சாவடியில், ஒரு போலி வாக்காளர், 22 முறை ஓட்டளித்துள்ளார். இத்தனைக்கும் அவர் இந்தியர் கூட அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் மேத்யூஸ் பெரேரோவின் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது'' என கூறியிருந்தார்.
தற்போது பிரேசில் மாடல் அழகி பெயரில் ஓட்டு போடப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
இந்நிலையில், ராகுல் குற்றம் சாட்டிய, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம் பெற்றதாக கூறப்படும் வாக்காளர்களில் ஒருவரான பிங்கி ஜூகிந்தர் அளித்த பேட்டி: நான் எந்த தவறும் செய்யவில்லை. வாக்கு திருட்டு ஆதாரமற்றது. தனது வாக்காளர் அடையாள அட்டையில் அச்சுப்பிழை இருக்கிறது. தனது வாக்காளர் அட்டையில் நீண்ட காலமாக புகைப்படம் தவறாக அச்சிடப்பட்டு உள்ளது.
நான் எனது வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தபோது, அது முதலில் ஒரு புகைப்படத் தவறாக அச்சிடப்பட்ட நிலையில் வந்தது. அதில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் படம் இருந்தது. நாங்கள் அதை உடனடியாகத் திருப்பி அனுப்பினோம். ஆனால் இன்னும் எங்களுக்கு சரியான நகல் கிடைக்கவில்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் எனது வாக்காளர் சீட்டு மற்றும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டளித்தேன். பிழை தேர்தல் கமிஷன் பக்கம் தான் இருக்கிறது. அது எப்படி என் தவறு? முதலில் தவறு நடந்தபோது, நாங்கள் ஏற்கனவே திருத்தம் கோரியிருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதே மாடலின் புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு பெண் முனிஷ் தேவியின் மைத்துனர் கூறியதாவது: முனிஷ் மற்றும் தங்கள் குடும்பத்தினர் இப்போது சோனிபட்டில் வசித்து வந்தாலும், மச்ரோலி கிராமத்தில் உள்ள மூதாதையர் வீட்டிலிருந்து ஓட்டளித்து வருகிறார்கள்.
இன்று தேர்தல் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது; அவர்கள் முனீஷின் வாக்காளர் அட்டையை அனுப்பச் சொன்னார்கள், நான் அதை அனுப்பிவிட்டேன். நான் என் அம்மாவையும் மைத்துனியையும் ஒன்றாக வாக்களிக்க அழைத்து வந்தேன். 2024ல் அவர் ஓட்டளித்தார். இது ஓட்டு திருட்டு கிடையாது.
நாங்கள் எங்கள் சொந்த வாக்குகளை அளிக்க வந்தோம் என்பது முகவர்களுக்கும் தெரியும். இந்த பிரச்னை முன்பு ஒரு முறை நடந்தது, முனிஷின் புகைப்படம் தவறாக மாற்றப்பட்டது, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் படம் இருந்தது. ஆனால் நாங்கள் அவரது வாக்காளர் அட்டையைக் காட்டியபோது, அவர்கள் அவளை ஓட்டளிக்க அனுமதித்தனர். பிழை தரவு ஆபரேட்டர்களிடமிருந்து வந்தது, எங்களிடமிருந்து அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு படத்தில் வடிவேலு "எந்த கெட்டப் ல வந்தாலும் கண்டுபிடுச்சுர்றாங்களே".. என்பார்.. மண்டை மேல இருக்கும் கொண்டையை மறை .. என்பார்கள்.. அந்த வடிவேலு கேரக்டர் தான் ராவுல் ...
ஒரு நாடகத்தில் சோ அவர்கள் வேட்பாளர். அவருக்கு ஆலோசனை கூறுவது ஜக்கு என்ற ரவுடி. ஜக்கு சொல்வது. "நீ எதிர்க்கட்சி வேட்பாளரை "பேமானி" என்று கூறு என்பான். ஒ அவர் மிகவும் நல்லவர் என்பார் சோ . இதை பாரு நீ பாட்டுக்கு ஒரே இடம் எல்லாம் அவரு பேமானின்னு சொல்லிக்கிட்டே போ. அவருக்கு வேறு வழியில்லை நான் பேமானி இல்லை என்று கதற ஆரம்பிப்பார். ராகுல் உபயோகப்படுத்துவது இந்த டெக்னீக்தான் .
ஐயா ராகுல், த/பெ. ராஜீவ் பெரோஸ்கான் காந்தி?? தாய்.பெ.சோனியா வின்சி, அவர்களே. தாங்கள் பள்ளிப்படிப்பையே பாதியில் விட்டதால் தங்களுக்கு அரசு அதிகாரிகள். முக்கியமாக தேர்தல் கமிஷன் மற்றும் சுதந்திரமான அதன் தலைவர்கள் என்றால் அஸ்தியில் ஜூரமா?. ஏன் பயந்து சாகிறீர்கள்? உங்களிடம""அன்னை"" இருக்கிறார்கள், சகோதரத் தலைவி இருக்கிறார்கள்..""கார்""கே . இருக்கிறார்.
""ஜெய்ராம்"" இருக்கிறார். சிங்வி இருக்கிறார், கபில் சிபல் இருக்கிறார்.
இவர்கள் அனைவருல் உங்கள் கையீல் இருப்பதால் உச்சநீதிமன்றம் உங்கள் மகுடிக்கு கட்டுப்படுவார்கள். ஏனவே சட்டுப்புட்டுன்னு ஆக்சன் எடுத்து தேர்தல் கமிஷனையே உண்டு இல்லைன்னு பண்ணுங்க,,,, நாங்க ஆவலுடன்""ஐ ஆம் வெய்ட்டிங்"" னு காத்திருக்கிறோம்.
ராகுல் கருத்துப்படியும், அந்த பெண்ணின் கருத்துப்படியும் தேர்தல் ஆணையம்தான் குற்றவாளி.... இதுதான் ஆணையமா? இல்லை புரோக்கர் ஆணையமா??
தினமும் லொள்ளு தாங்க முடியாத அளவுக்கு போய்கொண்டு இருக்கு. இந்த நாடு எப்போ சுத்தமாகும்.? படா பேஜாரா இருக்கு.
ஒரே முகத்துடன் பலமுறை ஓட்டைப் போட முயற்சித்திருந்தால் பூத்தில் கண்டுபிடித்திருப்பார்கள். அதனால் ஒருவேளை அந்தப் பெண் பர்தா அணிந்து கொண்டு ஓட்டு போட்டிருக்கலாம். எனவே ராகுல் பர்தா அணிந்து ஓட்டுப் போட வருவதைத் தடைசெய்ய கோரிக்கை விடலாம். போராட்டம் கூட நடத்தலாம்.
ஆரூர் ரங்...காரே... கேட்ட கேள்விக்கு டக்குன்னு பதில் சொல்லாம... புர்கா போட்டாங்க, அத்தப் போட்டாங்க, இத்தப் போட்டாங்கன்னு சால்ஜாப்பு சொல்லக் கூடாது... தப்பு நடந்ததா இல்லையா...? ஹரியானா வாக்காளர் பட்டியலில் “மேத்யூஸ் பெரேரோ“ 12 வாக்காளர்களுக்கு இருந்ததா இல்லையா...? இருந்தது என்றால் அது உண்மைதானே... அதற்கு யார் பொறுப்பு... தலைமை தேர்தல் ஆணையம்தானே... அப்ப... “ஜோர் திருட்டு” உண்மைதானே...? உண்மையை ஒத்துக்காம... கம்பி கட்ற கதையெல்லாம் சொல்ற ஆரூர் ரங்..காரே...? இந்த மடைமாற்ற புத்தி உன்ன விட்டு போலையே...?
புடிச்சவங்க போட்டோவைதான் போடுவாங்க ஏன்னா அந்த அம்மா எங்கேயோ இருக்கு இதெல்லாம் பக்கதுன்னு ஒரு நினைப்பு. ஆனா நினைப்புதான் பொஷப்பை கெடுக்குது
வாக்கு திருட்டு என்ற புரளி ஆதாரமற்றது. தேர்தல் ஆணையம் எந்த பயனும் பெற முடியாது. வாக்கு ரகசியம். சில லட்சம் மாறினாலும் ஒரு அதிக ஓட்டு வெற்றியை தீர்மானிக்கும் முறை. திருடி பயன் இல்லை? வரைவு வாக்காளர் முதல் வேட்பாளர் தேர்வு வரை வேடிக்கை பார்த்த காங்கிரஸ், ஓராண்டுக்கு பின், பீகார் தேர்தலுக்கு முன் கூறும் புகார் ஒரு சதி? .
கரூர் சம்பவம் தொடர்பாக நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசு மீது நடிகர் விஜய் சில விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்களுக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான எதிர்வினையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் அவர்கள் அண்ணாமலை, மணி ,சைமன் செபாஸ்டியன் , ஜோசப் இவர்களுக்கு எல்லாம் யாரும் REACT பண்ணக்கூடாது என்று சொல்லி இருக்கார், அவர்களே இதை எண்ணி எண்ணி வெந்து நொந்து போகணும் என்று ஆர்டர்
இதே போலத்தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபோது அவரது பெயரைக் கூட கூறாமல் தவிர்த்து அலட்சியம் செய்தார் கருணாநிதி. பிறகு நான்கு முறை அவரிடமே தோற்றார்.
ஆம், இது தான் அணைத்து துறைகளிலும்.மேலும்
-
சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் சொத்துகள் முடக்கம்: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி
-
ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு; மஹா., முதல்வர் பட்னவிஸ் கிண்டல்
-
அன்புமணி திருந்த வேண்டும்: சொல்கிறார் ராமதாஸ்
-
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
-
பீஹாரில் காங்கிரஸ் கூட்டணியில் மோதல் : பிரதமர் மோடி
-
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன்: டிரம்ப் உறுதி