தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (நவ.,06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ,560க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த நவ.,03ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் (நவ., 04) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (நவ.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.163க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று (நவ.,06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 11,250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று மாலை ஆபரண தங்கத்தின் விலை ரூ.560 விலை உயர்ந்து ரூ.90, 560 ஆகவும், ஒரு கிராம் ரூ.11,320 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.164க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்த நிலையில், இன்று உயர்வை சந்தித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை இந்த முறை தீபாவளியை விட போன முறை தீவாளியில் இருந்த மாதிரி ரூ.57,000 க்கு கீழே வர வேண்டும்மேலும்
-
தொழிற்சாலை ரெய்டில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல்; குஜராத்தில் 4பேர் கைது
-
சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் சொத்துகள் முடக்கம்: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி
-
ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு; மஹா., முதல்வர் பட்னவிஸ் கிண்டல்
-
அன்புமணி திருந்த வேண்டும்: சொல்கிறார் ராமதாஸ்
-
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
-
பீஹாரில் காங்கிரஸ் கூட்டணியில் மோதல் : பிரதமர் மோடி