டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ்: கோகோ காப் முதல் வெற்றி

ரியாத்: டபிள்யு.டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், டபிள்யு.டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் உலகின் 'டாப்-8' வீராங்கனைகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றனர்.

இதன் 'ஸ்டெபி கிராப்' பிரிவில் உலகின் 'நம்பர்-1' சபலென்கா (பெலாரஸ்), 'நடப்பு சாம்பியன்' கோகோ காப் (அமெரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பாவோலினி (இத்தாலி) இடம் பெற்றுள்ளனர்.

முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சகவீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் கோகோ காப், ஜாஸ்மின் பாவோலினி மோதினர். இதில் கோகோ காப் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தார்.
மற்றொரு 2வது போட்டியில் அரினா சபலென்கா 6-4, 2-6, 6-3 என ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார். ஏற்கனவே முதல் போட்டியில் பாவோலினியை வீழ்த்திய சபலென்கா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தார்.

Advertisement