புராதன சின்னங்கள் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், செயின்ட் மேரிஸ் துணை மருத்துவ கல்வி நிறுவன மாணவியருக்கு, புராதன சின்னங்கள் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம், காஞ்சி அன்ன சத்திரம் தன்னார்வ அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் செயின்ட் மேரிஸ் துணை மருத்துவ கல்வி நிறுவன மாண வியருக்கு புராதன சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது.

இதி ல், பல்லவர் கால வரலாறு மற்றும் புராதன சின்னங்களை மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டு கோவில் கட்டுமானம் குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவியர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டனர்.

புராதன சின்னங்களை பாதுகாப்ப து குறித்து காப்பாட்சியர் பயிற்சி அளித்தார். பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், விதைகள் சேகரிப்பது குறித்துபசுமை மேகநாதன் விளக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து காஞ்சி அன்னசத்திரம் மோகன், அஞ்சலி ஆகியோர் விளக்கினர்.

Advertisement