ராங் ரூட்டில் வாகனங்கள்: தொடரும் விபத்து அபாயம்

-நமது நிருபர்-


விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் ராங் ரூட்டில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாவது, வாடிக்கையாகி வருகிறது.

வி ழுப்புரம் - நாகை சாலையை நான்கு வழிச்சாலையாக, விரிவாக்கம் செய்ய 6300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல், 6 ம் தேதி பிரதமர் மோடி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த சாலையை திறந்து வைத்தார். இந்நிலையில் கட லுார், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், கொத்தட்டை, பெரியக்குமட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கம் செல்ல 'கிரா சிங்' உள்ளது.

இந்த கிராசிங்கில் சென்று சுற்றி செல்வதற்கு நேரம் ஆவதால், சாலை விதிகளின் படி இடது புறமாக செல்ல வேண்டிய சைக்கிள், பைக், கார் டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் வலது புறமாகமாக ராங் ரூட்டில் செல்கின்றனர்.

இதனால் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி, அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலியாவது வாடிக்கையாகி வருகிறது.

இதேபோல, கடந்த 1ம் தேதி பெரியகுமட்டி கிளியாளம்மன் கோவிலின் அருகே, ராங் ரூட்டில் சென்ற டாட்டா ஏஸ் வாகனம், எதிரில் வந்த 'பைக்' மீது மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலை விதிகளை கடைபிடித்து, கிராசிங்கில் சென்று இடது புறமாக மட்டுமே செல்ல வேண்டுமென, விழிப்புணர்வு பிரச் சாரம் செய்தால் வாகன விபத்தை தவிர்க்கலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement