பைக் திருடியவர் கைது 

புதுச்சத்திரம்: புதுச்சத்திரத்தில் பைக் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுாரைச் சேர்ந்தவர் ஆனந்தவேல்,43; இவர், புதுச்சத்திரம் தம்புசாமி மண்டபம் அருகில் கடந்த அக்.,27ம் தேதி தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர், புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில், பதிவான காட்சிகள் அடிப்படையில் பைக் திருடிய குறிஞ்சிப்பாடி, கன்னித்தமிழ்நாடு ராஜ்குமார்,40; என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement