தாழ்வாக சென்ற மின்கம்பிகள் மின்வாரியத்தினர் சீரமைப்பு

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சின்ன காஞ்சிபுரம் ஆண்டாள் நகரில், மின்கம்பத்தில் தாழ்வாக இருந்த மின்கம்பிகளை ஓரிக்கை பிரிவு மின் ஊழியர்கள் நேற்று சீரமைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 42வது வார்டு, ஆண்டாள் நகரில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் இரு மின்கம்பங்களுக்கு இடையே இடைவெளி அதிகம் உள்ளதால், மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளதால், காற்றடிக்கும்போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறப்பதோடு, மின்தடை ஏற்பட்டது.

மேலும், கனரக வாகனம், சவ ஊர்வல வாகனம் செல்லும்போதும், மின் கம்பியில் உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் இருந்தது.

எனவே, மின்விபத்தை தவிர்க்கும் வகையில், காஞ்சிபுரம் ஆண்டாள் நகரில், தாழ்வாக செல்லும் மின்கம்பியை இழுத்து கட்டி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், வடக்கு கோட்டம், ஓரிக்கை மின் பிரிவு உதவி பொறியாளர் சோழராஜன் தலைமையிலான மின் ஊழியர்கள், ஆண்டாள் நகரில், தாழ்வாக சென்ற மின்கம்பிகளை இழுத்து கட்டி சீரமைத்தனர்.

Advertisement