தெருக்களுக்கு பெயர் பலகை வைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதியில், பெயர் பலகை இல்லாத தெருக்களுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பெயர் பலகை அமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் உதயமலர் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகராட்சி பள்ளி மற்றும் அரசு பள்ளி என, 12 பள்ளிகளில் துப்புரவு பணி மேற்கொள்வது, பொது கழிப்பறையை துாய்மை படுத்தவும், புதிய கழிப்பறையை தனியார் வாயிலாக பராமரிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம், திரு.வி.க., பேருந்து நிலையம் மற்றும் நேதாஜி சாலை சந்திப்பில் கட்டப்பட்ட கடைகளை வாடகைக்கு விடுவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சியில் அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால்வாய், சிறு மேம்பாலம், பெயர் பலகை இல்லாத தெருக்களுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பெயர் பலகை வைத்தல் உள்ளிட்ட, 90 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Advertisement