சட்டவிரோத குடியேறிகள் வேலைகளைப் பறிக்கிறார்கள்: அமித்ஷா குற்றச்சாட்டு
பாட்னா: பீஹாரில் சட்டவிரோத குடியேறிகள் வேலைகளைப் பறிக்கிறார்கள். இந்த சட்டசபை தேர்தல் பீஹாரை ஊடுருவல் இல்லாத மாநிலமாக மாற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
பீஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பீஹாரில் சட்டவிரோத குடியேறிகள் வேலைகளைப் பறிக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த சட்டசபை தேர்தல் பீஹாரை ஊடுருவல் இல்லாத மாநிலமாக மாற்றும். ஆர்ஜேடி ஆட்சியில் இருந்தபோது படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்தது.
அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அதற்கு இடமில்லை. பிரதமர் மோடி மக்கானா வாரியத்தை நிறுவினார். லாலு பிரசாத் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவலை ஆதரிக்க வாரியம் அமைக்கப்படும். சம்பாரண் புதிய விமான நிலையத்தைப் பெறும். மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் புத்துயிர் பெறும்.
மாநிலத்தில் தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,பல்வேறு புதிய நலத்திட்டங்கள் தொடங்கப்படும். இந்திராவின் ஊழலுக்கு எதிராக பீஹார் போர் தொடுத்தது. அவசரநிலையை எதிர்த்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் ஆர்ஜேடி உதவியுடன் ஆட்சி செய்ய முயல்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
மேற்கு வங்காளத்தில் தான் சட்ட விரோத குடியேறிகள் அதிகம்மேலும்
-
நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
-
என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன்: இபிஎஸ்
-
பெங்களூரு மத்திய சிறையில், டி.வி, மொபைல் போன் : எளிதாக உலாவும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, கொலையாளிகள்!
-
தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ.,யின் ரூ.67 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை பறிமுதல்
-
கீற்றாக ஒரு மாற்றத்தின் காற்று
-
பீஹாரில் சாலையில் கொட்டப்பட்ட விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்