' மாஜி ' அமைச்சர் வீட்டிற்கு குண்டு மிரட்டல்

சென்னை: முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க., நிர்வாகியுமான ஜெயகுமார் வீட்டிற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயகுமார், வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை மர்மநபர் ஒருவர் இ - மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீசார், மோப்பநாய் சகிதம் சோதனையிட்ட போது, மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபரை பட்டினப் பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement