'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி: கள்ளக்குறிச்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வம்
கள்ளக்குறிச்சி: 'தினமலர் - பட்டம்' இதழின், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்களுக்காக, 'பதில் சொல்; பரிசு வெல்' தலைப்பில் வினாடி வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் பதிப்பு சார்பில், இந்தாண்டிற்கான மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள, 150 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. இதனை 'தினமலர்- பட்டம்' இதழுடன், புதுச்சேரி ஆச்சார்யா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் இணைந்து நடத்துகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான போட்டி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தகுதி சுற்றாக முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டது.
அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், கலெக்டர் பிரசாந்த், சி.இ.ஓ., கார்த்திகா, புதுச்சேரி ஆச்சார்யா கல்வி நிறுவன தலைவர் அரவிந்தன், ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன், நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற 16 மாணவர்கள், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது.
ஒவ்வொரு சுற்றிலும் எட்டு கேள்விகள் வீதம், 8 அணியினருக்கும் சாய்ஸ் அடிப்படையில் கேட்கப்பட்டன.
சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதில் அளித்தனர். சில கேள்விகளுக்கு பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்கள் பதில் கூறி பாராட்டுகளை பெற்றனர். இறுதியில், பிளஸ் 2 மாணவி விக் ஷயா, பிளஸ் 1 மாணவி தேவதர்ஷிணி அணி முதலிடம் பிடித்து அசத்தியது.
பிளஸ் 1 மாணவிகள் ஹரிணி, சிவசக்தி அணியினர் இரண்டாமிடம் பிடித்தனர். முதல் 2 இடங்களை பிடித்த அணிகள், வினாடி வினா போட்டியின் அடுத்த சுற்றுக்கு தேர்வானது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், கலெக்டர் பிரசாந்த், சி.இ.ஓ., கார்த்திகா, புதுச்சேரி ஆச்சாரியா கல்வி நிறுவன தலைவர் அரவிந்தன், ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன், நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர். விழாவில் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் உட்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.
இதேபோல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மீதமுள்ள பள்ளிகளில் நடக்கும் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி, மெகா வினாடி வினா போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில், முதலிடம் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அசத்தலான, அமர்க்களமான பரிசுகள் காத்திருக்கிறது.
அறிவு பெட்டகமாக 'தினமலர் -பட்டம்' இதழ் பள்ளி பாட புத்தகங்களையும், பொது அறிவு விஷயங்களையும் எளிமைப்படுத்தி, தாய் மொழியான தமிழில் அளித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து தரப்பினரின் பேராதரவோடு பட்டம் இதழ் வீறுநடை போட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களின் பொதுஅறிவு, அறிவியல் தகவல்கள் ஆகியவற்றுடன் கூடிய நுண்ணறிவை வளர்க்கும் வகையில், 'பட்டம்' இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் இடம்பெறுவதால், இன்றைய தலைமுறையினருக்கு அறிவு பெட்டகமாக உள்ளது.
@block_B@
வினாடி வினா போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. ஒரு சுற்றுக்கு 8 கேள்விகள் வீதம் மூன்று சுற்றுக்கு மொத்தம் 24 கேள்விகள் கேட்கப்பட்டன. போட்டியின் முடிவில் 'சி' அணியை சேர்ந்த மாணவிகள் தேவதர்ஷினி, விக் ஷயா, 'டி' அணி சேர்ந்த மாணவி மோனிஷா, மாணவன் இளங்குமரன், 'இ' அணியைச் சேர்ந்த மாணவிகள் ஹரிணி, சிவசக்தி ஆகியோர் தலா 30 மதிப்பெண்கள் பெற்று சமநிலையில் இருந்தனர். போட்டி டை-பிரேக்கர் ஆனதால் போட்டி மேலும் விறு, விறுப்பானது. இதனையடுத்து மூன்று அணியினருக்கு மட்டும் மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சரியான பதில் அளித்த 'சி' அணியினர் முதலிடமும், 'இ' அணியினர் இரண்டாமிடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.block_B
மேலும்
-
இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்
-
'ரோடு ஷோ'க்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
-
பாடகர் ஜூபீன் கார்க் மரண வழக்கு:அசாம் தலைமை தகவல் ஆணையர் ராஜினாமா!
-
அரசியலமைப்பைக் காப்பாற்றுவது இளைஞர்களின் பொறுப்பு; விழிப்புடன் இருக்க சொல்கிறார் ராகுல்
-
பொதுக்கூட்டம் நடத்த வைப்புத்தொகை; 3 மணி நேரம் அனுமதி: தமிழக அரசு
-
அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: இந்த முறை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்