மாவட்ட அளவில் கலா உத்சவ் போட்டி: ஜவகர் பால் பவனில் துவங்கியது
புதுச்சேரி: மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் ஜவகர் பால் பவனில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சமகர சிக்ஷாவால் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி ஜவகர் பால் பவனில் வாய்ப்பாட்டு, இசை, மற்றும் ஓவியம், கைவினை ஆகிய பிரிவுகளில் நடந்தது. இப்போட்டியை சமகர சிக்ஷா திட்ட இயக்குநர் எழில்கல்பனா துவங்கி வைத்தார்.
தொடர்ந்து நடந்த போட்டியில், 106 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பாரதியார் பல்கலைக்க கூட பேராசிரியர்கள், கலைமாமணி விருது பெற்ற பால்பவன் இசை வல்லுநர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
இன்று 6ம் தேதி தனி நடனம், குழு நடனம், கம்பி கருவிகள், தாள கருவி உள்ளிட்ட இசைக்கருவிகள் மீட்டல் ஆகிய போட்டிகளும், நாளை 7ம் தேதி நாடகம் மற்றும் பாரம்பரிய கதை சொல்லல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஜவகர் பால்பவன் தலைமையாசிரியர் மணிவேல் செய்திருந்தார்.
மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!