பா.ஜ., செயற்குழு கூட்டம்

புதுச்சேரி: வில்லியனுார் பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஓம் அனிதா தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

துணைத்தலைவர் பாண்டுரங்கன் மாவட்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.

மாநில தலைவர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட பொதுச் செயலாளர் கனகராஜன் தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி குறைப்பை அமல்படுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், மாநிலத் துணைத் தலைவர் ஜெயலட்சுமி,மாநில செயலாளர் புகழேந்தி, தொகுதி தலைவர்கள்அனுசுவை, அம்ரீஷ், முரளி, சபரி, தாமரைச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement