சி.ஐ.டி.யு., மாநில தலைவர் திடீர் ராஜினமா

புதுச்சேரி: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் பிரபுராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த சில மாதங்களாக , ஒரு சில நபர்களால் அமைப்பிற்குள் எனக்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சென்ற மாதம் நடந்த சி.ஐ.டி.யு., மாநில மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஜனநாயக முடிவை கட்சி ஏற்பதற்கு மாறாக மாநாட்டின் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துவதை என்னால் ஏற்க முடியவில்லை.

அதனால், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் பொறுப்பு மற்றும் மா. கம்யூ., அடிப்படைக் உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து என்னை விடுத்து கொள்கிறேன்.

Advertisement