ரோடுகளில் திரியும் மாடுகள்.. அதிகாரிகள் அசட்டையால் அல்லல்

திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய ரோடுகள் ,தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிவது சகஜமாகிறது.வாகனங்கள் வருவதை கண்டுக்காது சர்வசாதாரணமாக அலைகிறது. இது மட்டுமன்றி ரோடுகளிலே படுத்து துாங்குகிறது .வாகனஓட்டிகள் தான் மிக கவனமாக வாகனங்களை இயக்குவது தொடர்கிறது. இருந்தாலும் சில நேரங்களில் திடீரென ரோடுகளில் வாகனங்கள் குறுக்கிட அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இதில் பெரும்பாலும் டூவீலர் ஓட்டிகள்தான் பாதிப்பினை சந்திக்கிறனர். இதை முறைப்படுத்த உள்ளாட்சிகள் எந்த வித நடவடிக்கையும் இன்றி வேடிக்கை பார்க்கிறது. மாவட்ட நிர்வாகம்தான் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement