38 வயது பெண் 'டார்ச்சர்' 19 வயது வாலிபர் தற்கொலை
பெங்களூரு: தன்னுடனான கள்ளத்தொடர்பை கைவிடக்கூடாது என, 38 வயது பெண் மிரட்டியதால், 19 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா மூடசிந்தலஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சாரதா, 38. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, குழந்தைகளுடன் தனியே வசிக்கிறார்.
அதே கிராமத்தில் வசித்த நிகில் குமார், 19, என்பவருடன் சாரதாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்த விஷயம் நிகில் குமாரின் பெற்றோருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
சாரதாவை திட்டி, 'இனி எங்கள் மகனை பார்க்கக்கூடாது' என, கண்டித்தனர்; மகனுக்கும் அறிவுரை கூறினர். பெற்றோரின் பேச்சால் மனம் மாறிய நிகில் குமார், சாரதாவை விட்டு விலகினார். ஆனாலும், சாரதா அவரை விடவில்லை. பலவந்தமாக நிகில் குமாரை வெளியே அழைத்துச் சென்றார்.
மேலும், 'என்னுடன் உறவை முறித்துக் கொண்டால், நாம் இருவரும் நெருக்கமாக இருந்த படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்குவேன்' என மிரட்டியதாக தெரிகிறது.
சாரதாவின் நெருக்கடியால் விரக்தியடைந்த நிகில் குமார், காச்சனஹள்ளி ஏரி அருகில் உள்ள மரத்தில், நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 'மகன் தற்கொலைக்கு சாரதாவின் தொந்தரவே காரணம்' என, நிகில் குமாரின் பெற்றோர், சிந்தாமணி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2006 இல் உலகுக்கு வந்தான், விரைவில் அனைத்தையும் அனுபவித்தான் ..சென்றான் ....முடிந்தது...2k kids ...எல்லாம் மாயை..
காவல் துறை நீதி துறை முடிவா?
வாழவேண்டிய வயதில் வாழ தவறியதால் இந்த நிலை, மிகவும் வேதனை தரும் விஷயம் உன் பெற்றோரின் வழியை நீ அறியாமல் போனது துரதிர்ஷ்டம் தம்பி ...
Arrest
தவறு இருவருடையதும். ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. ஆனால் காவல்துறை மற்றும் நீதிமன்றம் எப்படி முடிவெடுக்குமோ?மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!