மருத்துவமனையில் தீ

திண்டுக்கல்: திண்டுக்கல் -- பழநி சாலையில் சத்திய சுபா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மேல்மாடியில் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் நேற்று மாலை 6:30 மணிக்கு திடீரென தீப்படித்தது.

பதட்டமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் வெளியேறினர். திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ், முன்னணி வீரர் புகழேந்தி தலைமையிலான குழுவினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நகர் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement