சனாதனம் குறித்து தன் தாயிடம் உதயநிதி கற்று கொள்ளலாம் அர்ஜுன் சம்பத் அறிவுரை
வேலுார்: 'துணை முதல்வர் உதயநிதிக்கு சனாதனம் குறித்து சந்தேகம் இருந்தால், தன் தாயிடம் கேட்டு விளக்கம் பெற்று கொள்ளலாம்' என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வேலுார், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் பொற்கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின், 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஹிந்து எழுச்சிக்கு வித்திட்ட ஊர், வேலுார் நாராயணி பீடம், மக்கள் பணிகளை செய்து வருகிறது. இங்கு, துணை முதல்வர் உதயநிதி வந்தது வரவேற்கத்தக்கது. அவர், 'ஆன்மிகவாதிகள் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை பரப்புகின்றனர்' என்கிறார். ஆன்மிகமும், அறிவியலும் இணைந்தது தான் ஹிந்து தர்மம்.
ஏற்கனவே, 'டெங்கு, மலேரியா போல சனாதனத்தை ஒழிப்பேன்' என உதயநிதி பேசினார். சனாதனம் குறித்து, அவருக்கு சந்தேகம் இருந்தால், அவர், தன் தாயிடம் கேட்டு விளக்கம் பெற்று கற்றுக்கொள்ளலாம்.
கடவுள் மறுப்பு பேசிய அண்ணாதுரை, அவரது கடைசி காலத்தில், 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் திருமந்திரத்தை கூறினார். கருணாநிதி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார்; ராமானுஜர் குறித்து நாடகம் எழுதி வெளியிட்டார். எனவே, எங்கு சென்றாலும் இங்கு தான் வந்தாக வேண்டும். தமிழ் சினிமாவில் தாலி அணிதல், மொட்டை அடித்தல், காது குத்துதல், விபூதி பூசுதல், திருநாமம் தரித்தல், பூக்குழி இறங்குதல் போன்ற ஹிந்து தமிழர்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சனாதனம் பற்றி முழுமையாக உதயநிதி அறிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதை இழிவாக பேசுவதை நிறுத்தினாலே போதுமானது.
சனாதனம் யாரால் தோற்றுவிக்கப்பட்டதோ அவரால் மட்டும் அழிக்கமுடியும் பிறப்பு காப்பு அழிப்பு மூன்றும் நடைபெறும் திராவிட முன்னேற்ற கழகம் காஞ்சிபுரம் அண்ணாதுரையால் தோற்றுவிக்கப்பட்டது தற்போது ஸ்டாலினால் காக்கப்படுகிறது அழிக்கப்படப்போகிறது எப்போது? உதயநிதி ஸ்டாலினால் கூட இருக்கலாம்.
உங்கள் கருத்து மிக தவறு. - சனாதனம் என்பது "அழியாதது" அல்லது "நிலையானது" என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். எனவே, "சனாதனம்" என்ற வார்த்தையின் அர்த்தத்தின்படி அது அழியாது, ஏனெனில் அது முடிவில்லாதது, எப்போதும் இருப்பது என்று கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாகவும், இந்து மதம் போன்ற சில தர்மங்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதால், "சனாதனம்" அழிக்கப்படவில்லை என நம்பப்படுகிறது.
"சனாதனம்" என்பதன் பொருள்: "சனாதனம்" என்ற சொல்லுக்கு "நிலையான" அல்லது "அழியாத" என்று பொருள்.
வரலாற்று உதாரணங்கள்: பல படையெடுப்புகள் மற்றும் ஆட்சிக் காலங்களில் கூட சனாதனம் நீடித்திருந்ததாக தினமலர் கூறுகிறது.
மதங்களின் அடிப்படையாக: சனாதன தர்மம் என்பது இந்து சமயத்தின் தத்துவத்தை குறிக்கிறது, மேலும் இது ஒரு அழியாத தத்துவமாக கருதப்படுகிறது.
வேறு மதங்களில் பயன்பாடு: சனாதன தர்மம் இந்து மதத்துடன் தொடர்புடையது என்றாலும், சில சமயங்களில் ஜெயினர்கள் மற்றும் பெளத்த மதத்தினாலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
யாராவது சனாதனம்னா என்னன்னு சொல்லுங்களேன். திராவிடம் என்கிறதும் புரியவில்லை. சனாதனம் என்கிறதும் விளங்கவில்லை. வாய்கிழிய பேசுகிறவர்களுக்கும் சனாதனம்னா தெரியாது.மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!