திருப்புவனத்தில் திசையெல்லாம் பள்ளங்கள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் குடிநீர் குழாய் அடிக்கடி சேத மடைந்து வருவதால் பழுது பார்ப்பு பணிக்காக தோண்டப்படும் பள்ளங் களால் தினசரி மக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

திருப்புவனத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், அம்ருத் 2.0 திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரப்பர் மற்றும் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டன. முறையான திட்டமிடல் இன்றி யும் ஒருங்கிணைப்பு இன்றியும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர தனியார் தொலை தொடர்பு பணிக்காக அவர்களும் பல இடங்களில் பள்ளம் தோண்டி கேபிள் பதித்துள்ளனர்.

பழுது பார்ப்பு பணி மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், தொலை தொடர்பு துறை ஆகி யோருடன் எந்த வித ஆலோசனையும் இன்றி தன்னிச்சையாக பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் 3 மீட்டர் ஆழத்தில் 2 அடி அகலத்தில் தோண்டப்படும் பள்ளங்களில் தினசரி பலரும் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் வலம் வரும் நிலையில் திடீரென மாடுகள் அவை களுக்குள் சண்டையிட்டு ஓடும்போது பொதுமக்கள், டூவீலரில் செல்லும் பலரும் அச்சத்துடன் விலகுகின்றனர். அப்போது பழுது பார்ப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் திருப்புவனம் வேன் ஸ்டாண்ட் அருகே தோண்டப்பட்ட பள்ளம் இன்னமும் மூடப்படாத நிலையில் அதே இடத்திற்கு எதிர் திசையில் நேற்று பள்ளம் தோண்டியுள்ளனர். இரு பக்கமும் பள்ளம் தோண்டி யதால் சிவகங்கை, மடப்புரம், ஏனாதி, அங்காடி மங்கலம் உள்ளிட்ட ஊர் களுக்கு செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வர வேண்டியுள்ளது.

பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகம் பதித்த குழாய்கள் சேதமடைந்த தால் பழுது பார்க்கும் பணியின் போது எங்கள் குழாய்கள் சேதமடைந்து விட்டன. எனவே வேன் ஸ்டாண்ட் அருகே பள்ளம் தோண்டி பழுது பார்த்து வருகிறோம்.

எதிர் திசையில் சில தினங்களுக்கு முன் அழுத்தம் தாங்காமல் ரப்பர் குழாய் வெடித்து விட்டது. எனவே நெடுஞ்சாலைத் துறையிடம் உரிய அனுமதி பெற்று பழுது பார்த்து வருகிறோம், என்றனர்.

Advertisement