நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி: நீதியின் வெளிச்சம் இந்த நாட்டின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார்.
சுப்ரீம் கோர்ட்டில், சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது: நீதி என்பது ஒரு சிலரின் சலுகை அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனின் உரிமை.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் என்ற வகையில் நமது பங்கு, சமூகத்தின் ஓரங்களில் நிற்கும் கடைசி நபரைக் கூட நீதியின் வெளிச்சம் சென்றடைவதை உறுதி செய்வதாகும்.
அனைவருக்கும் சட்ட உதவி மற்றும் நீதி கிடைப்பதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதில், நீதித்துறையின் முக்கிய பொறுப்பை பிரதமரின் வருகை பிரதிபலிக்கிறது. பொருளாதாரம், ஜாதி, பாலினம், மொழி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நபரும் நீதித்துறை தனக்குச் சொந்தமானது என்று உணர வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் பேசினார்.
முதலில் அந்த வெளிச்சம் உங்கள் அலுவலகத்தில் விழுந்து உங்கள் தலைக்குள் புகட்டும். ஏன் என்றால் அங்கு பாமரனுக்கு இருட்டும், வேண்டியவருக்கு வெளிச்சமுமாக உள்ளது. நீதி எல்லாம் காணவே இல்லை.
பாமர மனிதன் உச்ச நீதிமன்ற கதவை சுலபமாக தட்ட முடியுமா? பிரபலங்களுக்காக நீதிமன்றம் நடுநிசியில் கூட கூடுகிறது.
ரிடையராகும் போது தத்துவமா கொட்டும்.
True
கடைக்கோடி மக்களுக்கு தேவை நிதி, நீதி அதிகம் தேவைப்படாது. சொத்து, சுகம் இருந்தால் வழக்கு வரும். அரசு நிர்வாக அதிகாரிகள் இலவசமாக தீர்க்கும் பல விலை பெறும் வழக்குகளை வலுக்கட்டாயமாக நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சேவை நிதி மூலம் பணமாக்குவதை நிறுத்த வேண்டும். அரசு அதிகாரிகளை ஆளும் கட்சியின் ஊது குழல் ஆக்கிய நீதிமன்றம் நிர்வாகத்தில் இடை மனு மூலம் குறுக்கிட்டு ஊழலுக்கு வழி வகுப்பதை நிறுத்த வேண்டும்.
கடைக்கோடி மனிதரா? யாரு ? திமுகவா
உங்களது பதவி காலத்தில் நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைந்ததா? இல்லை சென்றடைய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
இந்தியாவில் முதலில் களையெடுக்கப்படவேண்டிய துறை நீதித்துறை என்பதனை யாரவது சொல்லுங்களேன்
ஒரு பாமரனுக்கு உள்ள அறிவுகூட உங்களைப்போன்ற நீதிபதிகளுக்கு இல்லை அப்புறம் எப்படி சாதாரண மனிதனுக்கு நீதி வழங்கப்படும். இந்து கடவுளை இழிவாக பேசுகிறார். இதே முஸ்லிம் நம்பிக்கையை பற்றி பேசி பாருங்க அப்புறம் தெரியும் உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது
உண்மைதான். தேவையே இல்லாமல் இந்துக் கடவுள்களை, அதன் நம்பிக்கையைப் பற்றி மாற்று மதத்தை சேர்ந்த உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகிய இவர் தனிப்பட்ட முறையில் கமெண்ட் செய்தது எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் பெரிய தாடி வைத்து கிரிக்கெட் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் ஆசிம் அம்லாவை பார்ப்பதற்கு ஒரு தீவிரவாதி போல் உள்ளார் என கமெண்ட் செய்து விட்டார். இதற்காக டீன் ஜோன்ஸ் பல முறை மன்னிப்பு கோரியும் இன்று வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் கமெண்டரி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இத்தனைக்கும் டீன் ஜோன்ஸ் அன்று கடவுள் பற்றி கடவுள் நம்பிக்கையைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. தனிப்பட்ட நபரை மட்டுமே தவறாக கமெண்ட் செய்தார். ஆனால் இங்கு ? நாட்டின் உச்சபட்ச பதவியில் இருப்பவர்கள் கூட இந்து மதக் கடவுள்களை பற்றி சர்வ சாதாரணமாக கிண்டலாக கமெண்ட் செய்கிறார்கள்!
வீட்டில் மூட்டை மூட்டையாக கள்ளத்தனமாக லஞ்சப்பணத்தை பதுக்கிவைத்திருந்த யஸ்வந்த் வர்மாவை முதலில் தண்டியுங்கள். அப்புறம் உங்கள் ஞானோதயம் பரப்பலாம்.மேலும்
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்
-
நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்
-
இந்தியாவை சுற்றிய டிரைசைக்கிள் நண்பர்கள்