போராடி வென்றார் பிரக்ஞானந்தா * உலக கோப்பை செஸ் தொடரில்...
கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.
கோவாவில், செஸ் உலக கோப்பை 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
நேற்று இரண்டாவது சுற்று 'டை பிரேக்கர்' போட்டி நடந்தன. கடந்த உலக கோப்பை தொடரில் பைனலில் பங்கேற்ற, இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஆஸ்திரேலியாவின் தெமுர் மோதினர்.
தலா 15 நிமிடம் கொண்ட, முதல் இரு போட்டியும் சமன் ஆனது. அடுத்து நடந்த, 'டை பிரேக்கரின்' (தலா 10 நிமிடம்) இரு போட்டியில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற, ஸ்கோர் 3.0-3.0 என இழுபறி நீடித்தது. பின் மீண்டும் 'டை பிரேக்கர்' (தலா 5 நிமிடம்) நடந்தது. இதன் இரு போட்டியிலும் வென்றார் பிரக்ஞானந்தா. முடிவில் 5.0-3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
விதித் அபாரம்
இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, 'மெஸ்ஸி' ஆப் செஸ்' என்றழைக்கப்படும் அர்ஜென்டினாவின் 12 வயது வீரர் ஓரோ பாஸ்டியனோ மோதிய முதல் இரு போட்டி 'டிரா' (1.0-1.0) ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் இரண்டாவது போட்டியில் விதித் வெற்றி பெற்றார். முடிவில் விதித் 2.5-1.5 என வென்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.