தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை மரப்பாலம் முடக்கம்
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் குவியும் பறவைகளை சுற்றுலா பயணியர் காண வசதியாக வனத்துறையினர் அமைத்த மரப்பாலம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது.
நவ., முதல் ஜன., வரை குளிர்கால சீசனில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் முதல், அரிச்சல் முனை கடற்கரை வரை தேங்கி கிடக்கும் நீரில், சிறிய மீன்கள், நண்டுகள் வாழும். இவற்றை உட்கொள்ளவும், குளிர் சீசனை அனுபவிக்கவும் பிளமிங்கோ பறவைகள், கடல் புறாக்கள் குவியும்.
இப்பறவைகள், குறிப்பாக டிச., மற்றும் ஜனவரியில் மட்டுமே வந்து, பிப்., மார்ச்சில் திரும்பி சென்று விடுகின்றன. இதன் பின், ஏப்., முதல் நீர் தேக்க பகுதிகள் வறண்டு கட்டாந் தரையாகிவிடும்.
ஓராண்டுக்கு முன், தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில், வனத்துறையினர், 90 லட்சம் ரூபாயில், சுற்றுலா பயணியர் பறவைகளை காண, டெலஸ்கோப் வசதியுடன் மரப்பாலம் அமைத்தனர்.
பாலம் திறந்து ஓராண்டு கடந்தும், தற்போது வரை 200 பயணியர் கூட இங்கு செல்லவில்லை.
ஓராண்டாக, நீர் தேக்க பகுதிகள் வறண்டு பறவைகள் வராததால், இந்த மரப்பாலம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் கூறினர்.
மேலும்
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவன்; 19 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்பு
-
தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்த்து திமுக மனு: நவ.,11ல் விசாரணை என சுப்ரீம்கோர்ட் அறிவிப்பு
-
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா; தபால் தலை, நாணயம் வெளியிட்டார் மோடி
-
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு