திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகள் அனுபவித்தனர். எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் திமுகவினர். அதனால் தான் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர்.
இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக நவ., 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் படிவங்களில் அளிக்கும் பெயர்கள் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் வரும் போது நாம் வீட்டில் இல்லாமல் போய்விட்டால் ஓட்டுக்களை இழக்கும் சூழல் ஏற்படும். ஏழைகள், கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து (74)
vbs manian - hyderabad,இந்தியா
07 நவ,2025 - 19:57 Report Abuse
அடிக்கடி கழகம் இப்படி சொல்லிக்கொள்ளும். அடிமனதில் உள்ள பயத்தின் வெளிப்பாடு. 0
0
Reply
பிரேம்ஜி - ,
07 நவ,2025 - 19:48 Report Abuse
மக்களுக்கு ஊழல் செய்பவர்கள் தான் வேண்டும் என்று ஆசை! அவர்கள் தான் ஓட்டுக்கு காசு நிறைய கொடுப்பார்கள்! 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
07 நவ,2025 - 19:43 Report Abuse
வெளியிலிருந்துவர யாரும் தேவை இல்லை. கடப்பாரை சகித மாக கட்சியின் அமைச்சார்களேஇருக்க மற்றவர் எதற்கு. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மண்வெட்டி கடப்பாரை ஸ்கலிதமாக் குழி வெட்டி கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் கண்ணுkku 8டிய வரை எதிர் கட்சியை சேர்ந்த ஒரு பயலையும் காணோம். 0
0
Reply
J.V. Iyer - Singapore,இந்தியா
07 நவ,2025 - 18:23 Report Abuse
அதானே மக்களை கடித்து குதறும் தெருநாய்களை ஒழித்துவிட முடியுமா என்ன? அதற்கு சப்போர்ட் செய்ய நாலுபேர் இருக்கிறாங்களே 0
0
Reply
Modisha - ,இந்தியா
07 நவ,2025 - 18:16 Report Abuse
விடிகாலை நாலு மணிக்கு வரும் அற்புதமான , நனவாகும் கனவு. 0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
07 நவ,2025 - 19:55Report Abuse
உங்கள் கனவில் காலை நான்கு மணிக்கு பொன்முடியார் வந்து கேட்கிறார் 0
0
Reply
உ.பி - ,
07 நவ,2025 - 18:15 Report Abuse
தானே அழிந்து விடும் 0
0
Reply
Vijay D Ratnam - Chennai,இந்தியா
07 நவ,2025 - 17:51 Report Abuse
திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று யார் கனவு காண்கிறார்கள் என்று தெளிவாக சொல்லுங்க ஐயா. வெளியிலிருந்து வந்து ஒருத்தன் திமுகவை ஒழிக்க முடியுமா. அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே, உங்க புள்ளாண்டான் இருக்காரே, ஒங்க மாப்ள இருக்காரே.கான்க்ராஸ் எப்படி தடம் தெரியாமல் போய்கொண்டு இருக்கோ, அது மாதிரி திமுக எக்ஸ்பைரி டேட் தாண்டிவிட்டது. DMK is injutious to Tamilnadu. ஹிந்துக்கள் இன்னும் ஜஸ்ட் ஐந்து சதவிகிதம் திமுகவை விட்டு வெளியே வந்தால் போதும், திமுக கதை முடிஞ்சி. 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
07 நவ,2025 - 17:37 Report Abuse
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர் முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் சொல்வது மிக மிக சரியான வார்த்தை. 0
0
Reply
theruvasagan - ,
07 நவ,2025 - 17:23 Report Abuse
ரொம்ப கன்பியூஸ் ஆயிட்டிங்க போல. திமுகவை ஒழிக்கணும்னு யாரும் நினைக்கலை. திமுக ஆட்சியை அகற்றணும் என்பதுதான் மக்களின் நோக்கம். மத்தபடி கட்சியை அழிக்க வெளியிலிருந்து யாரும் தேவையில்லை. 0
0
Reply
Sun - ,
07 நவ,2025 - 16:09 Report Abuse
எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது. சரி.எங்களுக்கு தெரிஞ்சு கொம்பன்ங்கிறது காட்டில இருக்கிற ஒரு யானை. அது ஏன் காட்டை விட்டு வெளிய நாட்டுக்கு வந்து அதுவும் தி.மு.கவை தொட்டுப் பாக்கப் போகுது? கொம்பனுக்கு வேற வேலை இல்லையா? 0
0
Reply
மேலும் 63 கருத்துக்கள்...
மேலும்
-
தொழிற்சாலை பஸ் மோதி 8 பசு மாடுகள் உயிரிழப்பு
-
குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி தண்டையார்பேட்டை சிறுமி பலி தண்டையார்பேட்டையில் சோகம்
-
வேளச்சேரி - பரங்கிமலை இடையே 'சரக்கு ரயில்' இயக்கி சோதனை 17 ஆண்டுகளாக நீடித்த பணி நிறைவு
-
நுால் வெளியீட்டு விழா
-
இ - சேவை மையமா; பொது கழிப்பறையா? கோடம்பாக்கம் மண்டல ஆபீசில் அவலம்
-
வடசென்னையில் வழிப்பறி ஒரே நாளில் 10 பேர் கைது
Advertisement
Advertisement