ஐ.பி.ஓ
டென்னெகோ க்ளீன் ஏர் இந்தியா
'டென்னெகோ க்ளீன் ஏர் இந்தியா' நிறுவனம், நவ., 12ல் துவங்கும் ஐ.பி.ஓ., வாயிலாக, 3,600 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் என்ற அடிப்படையில், 'டென்னெகோ மொரீஷியஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் முழு
தொகைக்குமான பங்குகளை ஐ.பி.ஓ.,வில் விற்கிறது. ஆபர் பார் சேல் வாயிலாக முழு
தொகையும் திரட்டப்படுவதால், இந்நிறுவனத்திற்கு புதிய நிதி எதுவும் கிடைக்காது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டென்னெகோ குழுமத்தைச் சேர்ந்த
இந்நிறுவனம், வாகனங்களுக்குத் தேவையான காற்று சுத்திகரிப்பான், சஸ்பென்ஷன்
போன்ற முக்கிய உதிரிபாகங்களை உற்பத்தி செய்கிறது.
எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது துணை நிறுவனமான 'எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தில் 6.30 சதவீத பங்குகளை புதிய பங்கு வெளீயிடு வாயிலாக விற்பதற்கு நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. 'எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் மற்றொரு முதலீட்டாளரான 'அமுண்டி இந்தியா ஹோல்டிங்' நிறுவனம், 3.70 சதவீத பங்குகளை விற்பனை செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் நவ., 10ல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.ஐ.,யின் துணை நிறுவனங்களில் 'எஸ்.பி.ஐ., கார்ட்ஸ், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு பின் பட்டியலிடப்பட உள்ள மூன்றாவது நிறுவனம் இதுவாகும்.
எம்வீ போட்டோவோல்டாயிக் பவர்
புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் 'எம்வீ போட்டோவோல்டாயிக் பவர்' நிறுவனத்தின் பங்கு விலை 206 முதல் 217 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2,900 கோடி ரூபாய் நிதி திரட்டுவதாக அறிவித்துள்ளது. ஐ.பி.ஓ.,வில் பங்குகளை வாங்க விரும்புபவர்கள் நவ., 11 முதல் 13 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனம் நவ., 18ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்படும்
இந்நிறுவனம், சூரிய சக்தி பேனல்கள், செல்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது.
மேலும்
-
துருக்கியில் வாசனை பொருட்கள் விற்பனை நிலைய கிடங்கில் தீ; 6 பேர் உடல் கருகி பலி
-
இந்தியா யாரையும் சீண்டாது; சீண்டினால் அவர்களை விடமாட்டோம்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள் தேர்தலில் தண்டிக்கப்படணும்: பீஹார் பிரசாரத்தில் மோடி பேச்சு
-
நவம்பர் 12ல் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
இந்தியா அதிரடியான துவக்கம்; மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிப்பு
-
டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்