உலகம் முழுவதும் அமைதியை விரும்புகிறேன்; அதிபர் டிரம்ப்

14

வாஷிங்டன்: உலகம் முழுவதும் அமைதியை விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
அணு ஆயுத ஒழிப்பு ஒரு சிறந்த விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் அதிபர் புடினிடம் இதைப் பற்றிப் பேசியுள்ளேன். சீன அதிபர் ஜி ஜின்பிங்யிடம் இதைப் பற்றிப் பேசியுள்ளேன். மேலும் எல்லோரும் அந்தப் பணத்தை மற்ற விஷயங்களுக்குச் செலவிட வேண்டும்.

அணு ஆயுதத் திறன்களில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா மற்றும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கு எந்தத் தேவையும் இல்லை. முன்னணி நாடுகள் கணிசமான அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன, நிதியை அதிக நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ஏற்கனவே தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை என்றும், முன்பே திட்டமிடப்பட்டது எனவும் தெரிவித்த விமானப்படை, அதிபர் டிரம்பின் உத்தரவுக்கும், சோதனைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement